​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சர்வதேச அகதிகள் தினம்

உரிமைகள், உணர்வுகள் மற்றும் உடமைகளை ஒருசேர இழந்து வீடின்றி, சொந்த நாடின்றி நாளொன்றுக்கு சுமார் 5 லட்சம் மக்கள் அகதிகளாக அலைகின்றனர். அகதிகள் சந்திக்கும் அவலம் குறித்து விளக்குகிறது இந்தச் செய்தித் தொகுப்பு. திடீரென வீடு, நிலம், நாடு ஆகியவை பறிக்கப்பட்டு உறவுகள்...

பத்து நாடுகளின் தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை

வருகிற 28-ஆம் தேதி ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி அங்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பத்து நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.  ஜப்பான் நாட்டின்  ஒசாகா நகரில் வருகிற 28, 29 ஆகிய தேதிகளில் வளர்ந்த நாடுகளின் கூட்டமைப்பான ஜி-20 அமைப்பின்...

அந்நிய முதலீடுகளை தொடர்ந்து ஈர்க்கிறது இங்கிலாந்து

பிரெக்சிட் குழப்பங்களையும் மீறி இங்கிலாந்தில் முதலீடுகள் குவிந்து வருகிறது. அந்நிய முதலீடுகளைப் பொருத்தவரையில், இங்கிலாந்து தொடர்ந்து ஐரோப்பாவில் முன்னிலையில் உள்ளது. 2018-ம் ஆண்டில் 1.48 ட்ரில்லியன் பவுண்டுகள் அளவுக்கு இங்கிலாந்து முதலீடுகளை ஈர்த்துள்ளது. இது ஐரோப்பாவின் பெரும் பொருளாதார ஜாம்பவான்களான ஜெர்மனி மற்றும், பிரான்ஸ்...

விலங்குகளின் உடற்கூறுகளை விவரிக்கும் கண்காட்சி

ஜெர்மனியில் விலங்குகளின் உடற்கூறுகளை விவரிக்கும் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த கன்தெர் வோன் ஹஜென்ஸ் (Gunther von Hagens) என்ற உடற்கூறு ஆய்வாளர் 1995ஆம் ஆண்டு முதல் மனித உடற்கூறுகளை விவரிக்கும் கண்காட்சியை பல நாடுகளில் நடத்தி வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது தெற்கு...

ஜெர்மனியில் பெய்த ஆலங்கட்டி மழையில் வாகனங்கள் கடும் சேதம்

ஜெர்மனியில் பெய்த ஆலங்கட்டி மழையால் வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் கடந்த சில தினங்களாக புயல் சின்னம் இருந்து வந்தது. இந்நிலையில் அங்கு பெரிய அளவிலான ஆலங்கட்டி மழை பெய்தது. இதில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து...

டாடா ஸ்டீல் - தைசன்கிரப் நிறுவனங்கள் இணைப்புக்கு தடை

ஜெர்மனியை சேர்ந்த தைசன்கிரப் என்ற ஸ்டீல் தயாரிப்பு நிறுவனத்தை டாடா ஸ்டீலுடன் இணைக்கும் நடவடிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் முட்டுக்கட்டை போட்டுள்ளது. சீனாவின் ஸ்டீல் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் விதத்தில் ஆர்செலர்மிட்டல் நிறுவனத்திற்கு அடுத்து, இரண்டாவது பெரிய ஐரோப்பிய ஸ்டீல் நிறுவனத்தை உருவாக்கும் முயற்சியாக இந்த...

பறவைகள் சரணாலயத்திற்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு பறவைகள்

நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு பறவைகள் கூடு கட்டி குஞ்சு பொறிக்க தொடங்கியுள்ளன. சுமார் 129 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இந்த சரணாலத்திற்கு குஞ்சு பொறிப்பதற்காக ஆண்டு தோறும் ரஷ்யா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில்...

ஜெர்மனியில் சர்வதேச மணல் சிற்பம் செய்யும் திருவிழா

உலகின் மிகப் பெரிய மணல் சிற்பம் ஜெர்மனியில் செய்யப்பட்டுள்ளது. பின்ஸ் ((Binz)) என்ற இடத்தில் சர்வதேச மணல் சிற்பத்திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு மிகப் பெரிய கோபுரம் போன்று மணல் சிற்பம் அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட போட்டியில் 54 புள்ளி...

சர்கஸில் 3டி ஹோலோகிராம் மூலம் விலங்குகள் சாகசம்

ஜெர்மனியில் உள்ள சர்கஸில் 3டி ஹோலோகிராம் ((Holograms)) மூலம் அரங்கேற்றப்பட்ட விலங்குகளின் சாகசங்கள் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. சர்கஸ்களில் விலங்குகளை வைத்து சாகசங்களை நடத்துவதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே நெதர்லாந்து, அயர்லாந்து மற்றும் மெக்சிகோவில் சர்கஸ்களில் விலங்குகளை வைத்து சாகசம் செய்வதற்கு...

85 நோயாளிகளைக் கொன்ற கொடூர கொலையாளிக்கு ஆயுள் தண்டனை

ஜெர்மனியில் 85 நோயாளிகளை கொன்ற புகாரில் செவிலியர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீல்ஸ் ஹொகல் (Niels Hoegel) என்ற 42வயதான ஆண் செவிலியர் 2000மாவது ஆண்டு முதல் 2005 ஆவது ஆண்டு வரை 85 நோயாளிகளுக்கு விஷ ஊசி செலுத்தி கொன்றதாக...