​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் - முதலமைச்சர்

தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க தற்போது நிலத்தடி நீரை எடுத்து விநியோகிக்க வேண்டிய சூழல் உள்ளதால், பொது மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்திய பின் கட்டுமான பணிகள் நடைப்பெற்று...

மழைநீர் சேமிப்பு திட்டத்தை நாடு தழுவிய இயக்கமாக செயல்படுத்த வலியுறுத்தல்

மழைநீர் சேமிப்புத் திட்டத்தை நாடு தழுவிய இயக்கமாக மாற்ற வேண்டும் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிதிஆயோக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குடிமராமத்து திட்டத்தின்கீழ் 1600 நீர்நிலைகள் சீரமைக்கப்பட்டு வருவதாக...

உண்மையான அதிமுக எனக் கூறியவர்கள், 5 சதவீதம் வாக்குகள் கூட பெறவில்லை - ஆர்.பி.உதயகுமார்

நடந்து முடிந்த தேர்தலில் ஜெயலலிதா இல்லாத நிலையிலும், அதிமுக 38.2 சதவீதம் வாக்குகளை பெற்றிருப்பதாக, அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் நடைபெற்ற சமூகப்பணிக்களுக்காக சபை அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது...

கட்சியின் முடிவுகள் குறித்து நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுவெளியில் பேசக் கூடாது - அதிமுக

கட்சியின் முடிவுகள் குறித்து பொதுவெளியில் பேசக் கூடாது என, நிர்வாகிகள், தொண்டர்களை அதிமுக தலைமைக் கழகம் அறிவுறுத்தியிருக்கிறது. அதிமுகவின் செயல்பாடுகள் குறித்து ஒரு சிலர் கூறும் கருத்துகள் ஏற்புடையது அல்ல என்றும் இபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளரான...

அதிமுகவில் எந்த கோஷ்டி பூசலும் இல்லை-எடப்பாடி பழனிசாமி

அதிமுகவில் கோஷ்டிப் பூசல் ஏதும் இல்லை என்றும், தொண்டர்களால் ஆளப்படுகிற கட்சியான அதிமுகவில் தலைவர் என்ற சொல்லுக்கே இடமில்லை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடியில், 80 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சார்நிலைக் கரூவூலம், ஆவணிபேரூர்...

சேலம் ஈரடுக்கு பாலத்தின் ஒரு பகுதியை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சேலத்தில், 441 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் ஈரடுக்கு மேம்பாலத்தின் முடிக்கப்பட்ட ஒருபகுதியை போக்குவரத்திற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.  சேலம் மாநகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், இரண்டு அடுக்கு மேம்பாலம் அமைக்கப்படுகிறது. தற்போது, அஸ்தம்பட்டி எல்ஆர்என் ஓட்டல் பகுதியில்...

சேலத்தில் அமையும் ஈரடுக்கு மேம்பாலம் ஒருபகுதி மேம்பாலம் ஜூன் 7ல் திறப்பு

தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் மாநகரங்களில் ஒன்று சேலம். கிட்டத்தட்ட 100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்கு பஞ்சமில்லை. மாநகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், தமிழ்நாட்டிலேயே இதுவரை இல்லாத வகையில், சேலத்தில், இரண்டு...

ஜெயலலிதா நினைவிடத்தில் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். மரியாதை

ஜெயலலிதா நினைவிடத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். தேனி மக்களவைத் தேர்தலில் ஓ.பி.எஸ்சின் மகன் ரவீந்திரநாத்குமார் வெற்றி பெற்றார். இதையடுத்து ஓ.பி.எஸ், அதிமுக நிர்வாகிகளுடன் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அப்போது ஓ.பி.எஸ்.சின் மகனும் தேனி மக்களவை உறுப்பினருமான...

இருமொழிக் கொள்கை தான் கடைபிடிக்கப்படும், அதில் எள்ளளவும் மாற்றமில்லை

அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தான் கடைபிடிக்கப்படும் என்றும், அதில் எள்ளளவும் மாற்றமில்லை என்றும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள தனது இல்லத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்தி ஒருபோதும் திணிக்கப்பட மாட்டது...

அதிமுக முன்னாள் கவுன்சிலர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை அடுத்த பல்லாவரத்தில், அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஒருவர் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டார். பல்லாவரம் சாவடி தெருவை சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் நாகராஜ், ஜெயலலிதா பேரவை நகர துணை செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2...