​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பொள்ளாச்சி விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால மெரினா மீண்டும் நிரம்பும்- ஈஸ்வரன்

பொள்ளாச்சியில் பெண்கள் ஆபாசமாக படம்பிடிக்கப்பட்டு மிரட்டப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசு உண்மை குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தாவிட்டால், ஜல்லிக்கட்டுக்காக மெரினா நிரம்பியது போல மீண்டும் ஒரு நிகழ்வு நடப்பதை யாரும் தடுக்க முடியாது என  கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின்...

கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே  ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. கல்குடியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 750க்கும் மேற்பட்ட காளைகளும், 220 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, வீரர்கள் அடக்கினர். இதில்,...

புதுக்கோட்டை அருகே களை கட்டிய ஜல்லிக்கட்டு போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகத்துடன் நடைபெற்றது. ஆலங்குடி அடுத்த கோவிலூரில் முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதில் சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 700 காளைகள் களமிறக்கப்பட்டன. வாடிவாசல் வழியாக ஆக்ரோஷத்துடன்...

அனுமதியின்றி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ரேக்ளா பந்தயம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தின்போது கட்டுப்பாட்டை இழந்த மாட்டுவண்டி ஒன்று பார்வையாளர்கள் பகுதிக்குள் நுழைந்து முறிந்து விழுந்தது. அலகுமலை பகுதியில் ரேக்ளா மற்றும் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ரேக்ளா  பந்தயம் நடைபெற்றது. இதில் 200 மீட்டர், 300 மீட்டர் என்ற...

விறுவிறுப்புடன் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்புடன் நடைபெற்றது. மேலமைக்கேல்பட்டியில் நடத்தப்பட்ட ஜல்லிகட்டைக் சட்டமன்ற உறுப்பினர் ராமஜெயலிங்கம் தொடங்கி வைத்தார். இதில் திருச்சி, கடலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 500 காளைகள் பங்கேற்றன. வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை 250க்கும் மேற்பட்ட...

மாசி திருவிழா : குமாரபாளையத்தில் 3வது ஆண்டாக ஜல்லிக்கட்டு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மாசித் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அங்கு 3 ஆவது ஆண்டாக ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், சி.விஜயபாஸ்கர், கருப்பணன், சரோஜா உள்ளிட்டோர் போட்டியை தொடங்கி வைத்தனர். 500க்கும் மேற்பட்ட காளைகள் களமாடுகின்றன....

புதுக்கோட்டை நகரின் மையத்தில் ஜல்லிக்கட்டுக் காளைக்கு சிலை - அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக அளவு ஜல்லிக்கட்டுப்போட்டிகள் நடப்பதால் மாவட்டத் தலைநகரின் மையத்தில் ஜல்லிக்கட்டு காளையின் சிலை ஒன்று அமைக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். கஜா புயலால் வீழ்ந்த மரங்களை ஈடு செய்யும் வகையில், இரண்டு மடங்கு மரக்கன்றுகளை நடும் பணிகளை அமைச்சர்...

களைகட்டிய மாதாக்கோட்டை ஜல்லிக்கட்டு

தஞ்சாவூர் மாவட்டம் மாதாக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்றது. அந்த பகுதியிலுள்ள லூர்து அன்னை ஆலய விழாவை முன்னிட்டு நடந்த இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், சுமார் 700க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன. வாடிவாசலிலிருந்து ஆக்ரோஷமாக எகிறி குதித்துவந்த காளைகளை, தயார் நிலையில் இருந்த...

பணியில் மெத்தனம் காட்டிய தாசில்தாரை கண்டித்ததற்கு எதிர்ப்பு, மாவட்ட ஆட்சியரை சிறைபிடித்த வருவாய்துறை ஊழியர்கள்

பணியில் கவனக்குறைவாக இருந்த தாசில்தாரை திட்டியதற்காக மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை சிறைப்பிடித்து வருவாய்துறை ஊழியர்கள்,  தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவராக இருப்பவர் வீரராகவ ராவ். மதுரையில் ஆட்சிதலைவராக இருந்த போது ஜல்லிக்கட்டு போட்டிகளை...

கதிர் நரசிங்கப் பெருமாள் கோவில் திருவிழா ஜல்லிக்கட்டு

திண்டுக்கல் அடுத்த பில்லமநாயக்கன்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் ஏராளமான காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்தன. போட்டியில் திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700 க்கும் மேற்பட்ட காளைகள்...