​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மேகதாது தொடர்பாக நாளை புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் - நாராயணசாமி

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாளை புதுச்சேரி சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, கர்நாடகம் காவிரியின் குறுக்கே மேலும் அணைகட்டக் கூடாது எனக் காவிரி நடுவர் மன்றம் இறுதித்...

மேகதாது பிரச்சனை குறித்து சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்திற்கு அனுமதி அளித்ததற்கு கண்டனம் தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  மாலை 4 மணிக்கு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் தொடங்கியதும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீர்மானத்தை முன்மொழிந்தார். இதைத் சட்டப்பேரவை எதிர்கட்சி...

தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று நடக்கிறது.. மேகதாது அணை தொடர்பாக விவாதிக்க முடிவு

மேகதாதுவில் அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது.  தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இந்தக்...

மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக நாளை சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் - மு.க.ஸ்டாலின் வரவேற்பு

மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்டுவது வரவேற்கத்தக்கது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், கஜா புயல் பாதித்த பகுதிகளில், மக்களின் நிலை இன்னும் மோசமாக இருப்பதாக தெரிவித்தார்....

அனைத்து வட்டாட்சியர்களும் பஞ்சமி நிலம் குறித்த அறிக்கையை 15நாட்களில் வெளியிட வேண்டும் - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்

தமிழகத்தில் அனைத்து வட்டாட்சியர்களும் பஞ்சமி நிலம் குறித்த அறிக்கையை 15நாட்களில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாகத் தேசியத் தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பஞ்சமி நிலம் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வில் ஒரு இலட்சத்து...

கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு சீரமைப்பு முயற்சி மிகப்பெரிய சவாலாக உள்ளது : முதலமைச்சர் பினராயி விஜயன்

கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு சீரமைப்பு முயற்சி மிகப்பெரிய சவாலாக இருப்பதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.  கேரள சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு சட்டப்பேரவையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் மழை...

மராத்தா இனத்தவர் இட ஒதுக்கீடு பிரச்சினையில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது - தேவேந்திர பத்னாவிஸ்

மராத்தா சமூகத்தினர் இட ஒதுக்கீடு பிரச்சினையில் அனைத்துக் கட்சியினரும் ஒருமித்த முடிவை எட்டியுள்ளதாக முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிஸ் தெரிவித்துள்ளார். இட ஒதுக்கீடு கோரி மகாராஷ்ட்ராவில் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் மும்பை-நவி மும்பை-புனே-சோலாப்பூர் உள்ளிட்ட நகரங்களில் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் போராட்டத்தில்...

கியூபாவின் புதிய அதிபராக மிக்வெல் டயாஸ் தேர்வு

கியூபா அதிபர் பதவியில் இருந்து ரால் காஸ்ட்ரோ விலகியதை அடுத்து, புதிய அதிபராக மிக்வெல் டயாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கியூபாவின் அதிபராக சுமார் 30 ஆண்டுகளாக இருந்த பிடல் காஸ்ட்ரோ, கடந்த 2006ஆம் ஆண்டில் தனது தம்பி ரால் காஸ்ட்ரோவை அதிபராக...

புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்கும் கியூபா; கேஸ்ட்ரோ குடும்பத்தைச் சேராத ஒருவர் அதிபராகிறார்

கியூபாவின் புதிய அதிபரை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வியாழக்கிழமை தேர்ந்தெடுக்க உள்ளனர்.  கியூப புரட்சிக்குத் தலைமை தாங்கிய முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ 1959 முதல் அந்நாட்டின் அதிபராக இருந்தார்.  2006 முதல் ஃபிடல் காஸ்ட்ரோவின் தம்பி ரவுல் காஸ்ட்ரோ அதிபராக பதவி...

இந்தியத் தேர்தல்களில் தலையீடுகள், தாக்கங்கள் -தடுப்பது எப்படி?

இந்தியத் தேர்தல்களில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தின் தலையீடும் தாக்கமும் இருந்ததா என்பதை ஆராய வரும் 27ம் தேதி தேர்தல் ஆணையம் சிறப்புக் கூட்டம் ஒன்றை கூட்ட உள்ளது. பேஸ்புக்கின் பலகோடி வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடி, அதை அமெரிக்கத் தேர்தல்களில் பயன்படுத்தியதாக அனாலிட்டிக்கா...