​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகத்திலுள்ள சுற்றுலாதளங்களில் பயணிகளின் வருகை அதிகரிப்பு..!

கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை நாளையொட்டி தமிழகத்திலுள்ள சுற்றுலாதளங்களில் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஒக்கேனக்கல்: தர்மபுரி மாவட்டம் ஒக்கேனக்கலில் தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களிலிருந்தும் குவிந்துள்ள சுற்றுலாப்பயணிகள், அருவியில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் மகிழ்ந்தனர். மேலும் தொங்குபாலம், முதலைப்பண்ணை, வண்ண மீன் காட்சியகம்...

வாடிவாசல் வழியே சீறிப் பாய்ந்த காளைகள்

திருச்சி: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அடுத்த பள்ளப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகத்துடன் நடைபெற்றது. இதனை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர் வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். கரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 700 காளைகள் களமிறக்கப்பட்டன. வாடிவாசல்...

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்தார். ராசிபுரம் அடுத்த எம்.ஜி.ஆர் காலனியை சேர்ந்த செங்கோட்டுவேல் மற்றும் அவரது மகன் மணிகண்டன் ஆகியோர் மொஞ்சனூர் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் வேலைக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு...

2.5 அடி உயரம் கொண்ட ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கோவில் குளத்தை சுத்தம் செய்யும் போது இரண்டரை அடி உயரம் கொண்ட ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. தேவகோட்டை அடுத்த கண்டதேவி என்ற கிராமத்தில் பழமை வாய்ந்த சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் மாசடைந்த குளத்தை...

ஷவரில் கொட்டும் நீரில் குதூகலமாக குளிக்கும் கோவில் யானை

திருச்சி அருகே கோவில் யானை ஒன்று தனக்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள ஷவரில், குதூகலமாக குளிக்கும் காட்சிகள் காண்போரை கவர்ந்து வருகிறது. திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில், பராமரிக்கப்பட்டு வரும் அகிலா என்ற பெண் யானைக்கு, கோடை வெயிலின் கடும் வெப்பத்தால் அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு...

சிவகங்கை மாவட்டத்தில் புரவி எடுப்புத் திருவிழா கோலாகலம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே புரவிஎடுப்பு திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சிங்கம்புணரி அருகே எஸ். கோவில்பட்டியில் உள்ள செகுட்டு அய்யனார் கோயிலில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு கடந்த 10ம் தேதி அன்று புரவிகள் செய்ய பிடி மண் கொடுக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து புரவி...

வரதராஜ பெருமாள் கோவில் திருவிழாவில் இருதரப்பினர் மோதல்

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில் திருமங்கை ஆழ்வார் பாசுரம் பாடுவதில் தகராறு மூண்டது. வடகலை மற்றும் தென்கலை பிரிவு அய்யங்கார்களுக்கு இடையே மோதல், கைகலப்பு ஏற்பட்டது. வடகலை பிரிவினர் திருமங்கை ஆழ்வார் பாசுரத்தை பாடவிடாமல் தென்கலை பிரிவினரை தடுத்த போது...

ஜெகன்மோகன் ரெட்டிக்கு திருப்பதி கோவில் அர்ச்சகர்கள் வாழ்த்து

ஆந்திர முதல்வராக பதவியேற்க உள்ள ஜெகன்மோகன்ரெட்டிக்கு திருப்பதி வெங்கடாசலபதி கோவில் அர்ச்சகர்கள் பிரசாதம் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 151 தொகுதிகளில் வென்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உள்ளது. அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன்ரெட்டி...

விறுவிறுப்புடன் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்புடன் நடைபெற்றது. நெல்லிக்குளத்தில் ஸ்ரீ வீரசூரையா அரியநாச்சியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட காளைகள் களமிறக்கப்பட்டன. வாடிவாசல் வழியே...

தவறிவிழுந்த ஆட்டுக்குட்டிகளை மீட்க கிணற்றுக்குள் இறங்கியவர் மயக்கம்

சென்னை ஆவடி அருகே கிணற்றில் விழுந்தவரை தீயணைப்புத்துறையினர் மீட்ட வீடியோ வெளியாகியுள்ளது. கோவில்பதாகை என்ற இடத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தனது வீட்டுக்கு அருகே 60 அடி ஆழமுள்ள குறுகலான கிணற்றில் விழுந்த இரண்டு ஆட்டுக்குட்டிகளை மீட்க இறங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் வெகுநேரமாக...