​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கொடைக்கானல் சுற்றுவட்டாரத்தில் பெய்த திடீர் சாரல் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

கொடைக்கானலில் திடீரென பெய்த சாரல் மழை பொதுமக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த சில மாதங்களாக வெயிலும் பனியும் வாட்டி வந்த நிலையில், இந்த மழையால் உள்ளூர் வாசிகளும் விவசாயிகளும் சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனர். பேருந்து நிலையம், அண்ணாநகர், அண்ணாசாலை, பாம்பார்புரம்,...

கொடைக்கானலில் சீல் வைக்கும் பணி - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

கொடைக்கானலில் குடியிருப்புகள் கல்விநிலையங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை புதிய மாஸ்டர் பிளான் நடைமுறைக்கு வரும்வரை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை சேர்ந்த பலர் இப்பிரச்சனை குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில்,"கொடைக்கானலில்...

சேலம், கிருஷ்ணகிரி, தேனி உள்பட 5 மாவட்டங்களில் பரவிய காட்டுத் தீ

தமிழ்நாட்டின் ஐந்து மாவட்டங்களின் வனப்பகுதிகளில் பரவும் காட்டுத்தீயால், நூற்றுக்கணக்கான ஏக்கரில், அரியவகை மரங்கள், தாவரங்கள் எரிந்து நாசமாகி வருகின்றன சேலம் மாவட்டம் ஏற்காடு அடிவாரத்தில், கருங்காலி என்ற ஊர் அருகே உள்ள காட்டில், நேற்று முன்தினம் தீ பரவியது. இந்த தீ கட்டுப்படுத்தப்பட்ட...

விதிமீறல் கட்டடங்கள் குறித்து ஆய்வு, 405 கட்டடங்கள் விதிகளை மீறியதாக நோட்டீஸ்

கொடைக்கானல் வில்பட்டி பஞ்சாயத்து பகுதியில் விதிமீறல் கட்டடங்கள் குறித்த கணக்கெடுப்பு ஆரம்பமாகியுள்ளது.மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவின்படி விதி மீறல் கட்டடங்கள் குறித்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குழுக்கள் ஆய்வு மேற்கொண்டன. குறிஞ்சி நகரில் கட்டப்பட்ட 405 கட்டடங்களுக்கு நோட்டீஸ் விடுக்கப்பட்டது....

பார்வையாளர்களை கவர்ந்த மலர் கண்காட்சி

புதுசேரியில் நடைபெற்று வரும் மலர் கண்காட்சியில் பல்வேறு வகையான மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. புனே, ஒசூர், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட அரியவகை பூக்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இங்கு வைக்கப்பட்டுள்ள காய்கனி வகைகள், மலர் அலங்காரங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. இந்த கண்காட்சியை புதுச்சேரி,...

கொடைக்கானல் மேல்மலை கிராமத்தில் கடும் தண்ணீர் பஞ்சம்

கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூரில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கும் மன்னவனூரில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். தற்சமயம் சாலையோரம் ஓடும் ஓடை நீரை மோட்டார் மூலம் இரைத்து வாகனங்களில் ஊருக்குள்...

வரன்முறை இல்லாத கட்டிடங்கள் தொடர்பான நீதிமன்ற உத்தரவு, எந்தவித பாதிப்புமின்றி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்

கொடைக்கானல் பகுதியில் வரன்முறை இல்லாத கட்டிடங்களை வரன்முறை படுத்துவது தொடர்பான நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் பொருட்டு,  பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு எந்தவித பாதிப்புமின்றி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர், திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். கொடைக்கானல் வட்டத்தில் 1378 பயனாளிகளுக்கு ரூ.79 இலட்சம்...

ஆபத்தான முறையில் தனியார் வாகனங்களில் பயணம்

கொடைக்கானல் கீழ் மலைப் பகுதிகளில் அரசின் அனுமதி பெறாமல் பொதுமக்களை ஆபத்தான முறையில் வாகனங்களில் ஏற்றிச் செல்லும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பண்ணைக்காடு மலைப்பாதையில் 4 கிலோ மீட்டர் தூரம் உரிய அனுமதி இல்லாமல் பராமரிப்பில்லாத...

கொடைக்கானலில் கடும் பனிப்பொழிவால் பூக்கள், செடிகள் கருகி வருகின்றன

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடும் பனிப்பொழிவால் பூக்கள், செடிகள் கருகி வருகின்றன. மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த இரண்டு மாதங்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் பூக்கள், செடிகள் கருகி வருகின்றன. மேய்ச்சல் நிலங்களில் உள்ள புற்களும் காய்ந்து வருவதால், கால்நடைகளுக்கும் போதிய...

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. பள்ளித் தேர்வு நேரம் நெருங்கி கொண்டிருப்பதாலும், கடும்பனி மற்றும் உயர்நீதிம்ன்ற உத்தரவின் பேரில் விதிமீறிய கட்டிடங்கள் அப்புறப்படுத்தப்படுவதாக செய்திகள் வருவதும் சுற்றுலா பயணிகள் வருகை குறைவுக்கு காரணங்களாக...