​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

KRP அணையின் உபரிநீரை பாம்பாறு அணைக்கு கொண்டுவர விவசாயிகள் வேண்டுகோள்

கே.ஆர்.பி அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை ஊத்தங்கரை பாம்பாறு அணைக்கு விடக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாரம்பட்டி, கானம்பட்டி, பாவக்கல், கொட்டுக்காரம்பட்டி, வண்டிக்காரன்கொட்டாய், புதூர் என நூற்றுக்கணக்கான கிராமங்களில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கரில் விவசாய நிலங்கள் பாம்பாறு அணை நீரை...

காவிரி கூட்டுக்குடிநீர்த்திட்ட குழாயில் உடைப்பு - 6 மாதங்களாக தண்ணீர் வீணாகும் அவலம்

திண்டுக்கல் மாவட்டத்தில் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்ட குழாய் உடைந்து 6 மாதங்களாக தண்ணீர் வீணாகும் அவலம் நிலவுகிறது. கரூர் மாவட்டத்திலிருந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்துக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. வேடசந்தூர் அருகே...

திருவள்ளூரில் கட்டி முடிந்து 3 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத சலவைக்கூடம்

திருத்தணியில் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வராத சலவைக்கூடத்தை பயன்பாட்டுக்கு திறக்குமாறு சலவைத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருத்தணியில் வசிக்கும் சலவைத் தொழிலாளர்களின் வசதிக்காக, 13வது வார்டான அனுமந்தாபுரத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சி சார்பில் சலவைக்கூடம் அமைக்கப்பட்டது. 2016-ஆம் ஆண்டே...

80 சதவீதம் அரசு மானியத்தில் சூரிய ஒளி மூலம் விவசாயம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து 10 ஆண்டுகளாக மின் இணைப்புக்காக அலைந்தவர் சூரிய ஒளி மின்சாரம் மூலம் அமோகமான நெல் விளைச்சலை கண்டுள்ளார்.  கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜகோபால். இவர் தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில்...

உதிர்ந்த எலுமிச்சங்காய்கள் மூட்டைக்கு 50 ரூபாய் கூட விலை போகவில்லை என விவசாயிகள் கவலை

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டாரத்தில் ஆயிரம் ஏக்கரில் பயிரிட்டிருந்த எலுமிச்ச மரங்கள் சாய்ந்தும் காய்கள் உதிர்ந்தும் சேதமடைந்ததால் விவசாயிகளுக்குப் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.  புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டாரத்தில் பரவியுள்ள செம்மண் நிலத்தில் நீர்ப்பாசன வசதிகள் இல்லை. இந்நிலையில் இப்பகுதி விவசாயிகள் ஆழ்துளைக்கிணறுகள் அமைத்து...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கார்த்திகை தீப உற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபங்கள் ஏற்றி கார்த்திகை தீப உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கார்த்திகை தீபத்தையொட்டி ஏழுமலையான் கோவிலில் நேற்று மாலை 5 மணிக்கு கோவிலில் உள்ள யோக நரசிம்மர் சுவாமி சன்னதி அருகே உள்ள பரிமள மண்டபத்தில் நூறு தீபங்கள்...

கஜா புயல் பாதிப்புக்குள்ளான மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு என்ன ?

கஜா புயலின் தாக்கத்தால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தருவதோடு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர். கஜா புயல் தாக்கி.... நாட்கள் நான்கு கடந்த நிலையில்...

புயல் பாதிப்பு மாவட்டங்களில் 1,767 மருத்துவ முகாம்கள் - அமைச்சர் விஜயபாஸ்கர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆயிரத்து 767 மருத்துவ முகாம்கள் மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 3 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாகவும் நிலைமை சீரடையும் வரை...

கஜா புயலால் தஞ்சாவூரில் 2வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கஜா புயலால் தஞ்சாவூரில் 2வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் கடற்கரையோரப் பகுதிகள் மட்டுமின்றி, தஞ்சை மாநகரும் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்ததோடு, மின்கம்பங்கள், செல்போன் கோபுரங்களும் முறிந்து விழுந்தன. இதனால், நகரம்...

சென்னை புறநகரில் அதிகாரிகள் மூடிய ஆழ்துளை கிணறுகள் மீண்டும் செயல்படுவது குறித்து மக்கள் அதிர்ச்சி

சென்னை புறநகரில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த  ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்ட நிலையில், மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி, திருவேற்காடு ,செம்பரம்பாக்கம்,சென்னீர்குப்பம்,குமணன்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர்...