​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கொளுத்தும் வெயில்.... மரத்தடி..... மண் தரை.... இதன் பெயர் பள்ளியா?

விருத்தாச்சலம் அருகே குடிக்க தண்ணீர் இன்றி, படிக்க வகுப்பு அறைகள் இன்றி, போதிய பாதுகாப்பு இன்றி அரசு பள்ளி மாணவர்கள் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.  தினந்தோறும் இன்னல் படும் மாணவர்களின் நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. கொளுத்தும் அக்னி வெயிலுக்கு...

அனைத்துப் பள்ளிகளிலும் சர்வதேச யோகா தினத்தை கொண்டாட நடவடிக்கை

அனைத்துப் பள்ளிகளிலும் நாளை சர்வதேச யோகா தினத்தை கொண்டாட நடவடிக்கை எடுக்குமாறு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநில திட்ட இயக்குநர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், நாளை சர்வதேச யோகா தினம் கொண்டாடுதல் தொடர்பாக, மத்திய மனிதவள...

வெளியானது தரவரிசைப் பட்டியல்..!

பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்தோருக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.  இந்த ஆண்டு 479 பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 940 இடங்களுக்கு ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 பேர் பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு ரேண்டம் எண்...

இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியா?

தமிழக அரசின் ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இந்தி மட்டுமே ஆட்சிமொழி என குறிப்பிடப்பட்டு இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. நாட்டில் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் தேசிய மொழியோ ஆட்சி மொழி என்றோ எதுவும் குறிப்பிடப்படாத நிலையில் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் 210...

தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற தகுதியானவர்கள் பெயர் பட்டியல் வெளியீடு

தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவதற்கு தகுதியான ஆயிரத்து 627 முதுநிலை பட்டதாரி மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் தற்காலிக பெயர் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பட்டியலில் உள்ளவர்களின் பணிக்காலம் மற்றும் சுய விவரக்குறிப்புகளை சரிபார்த்து சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் EMIS இணையதளத்தில்...

11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்திலும், தேர்வு நடைமுறையிலும் எந்த மாற்றமுமில்லை

11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்திலும், தேர்வு நடைமுறையிலும் எந்த மாற்றமுமில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த ஆண்டில் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு 5 பாடங்களாக குறைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்...

நீட் தேர்வை தவிர்க்க கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வலியுறுத்தல்

நீட் தேர்வை தவிர்க்க வேண்டுமென்றால், கல்வியை மத்திய அரசு பட்டியலிலிருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி வலியுறுத்தியுள்ளார். சென்னை தலைமை செயலக வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து...

பணி நியமன ஆணை வழங்கக் கோரி சிறப்பு பாடங்களுக்காக தேர்வானவர்கள் போராட்டம்

பணி நியமன ஆணை வழங்கக் கோரி சிறப்பு பாடங்களுக்காக தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள், பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசுப் பள்ளிகளில் தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட சிறப்பு பாடங்களுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்ய கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர்...

தண்ணீர் பிரச்சனையால் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதாக வெளியான தகவல் தவறு

தண்ணீர் பிரச்சனையால் சில அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதாக வெளியான தகவல் தவறானது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள காவிலிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினியை செங்கோட்டையன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம்...

தண்ணீர் பிரச்சனையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் தவறானவை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் தவறானவை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த நம்பியூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகளில் தண்ணீர் பற்றாக்குறை தொடர்பான தகவல்கள் தங்கள் கவனத்துக்கு...