​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உணவு தேடி வந்து 40 அடி ஆழ கிணற்றில் விழுந்த கரடி

ஒடிசா மாநிலம் பாலசோரில் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த கரடி பத்திரமாக மீட்கப்பட்டது. கரடி விழுந்ததைக் கண்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் கயிறு கட்டி கரடியை கிணற்றிலிருந்து மேலே கொண்டு வந்தனர். பின்னர்...

சீனாவிடமிருந்து இரவல் பெறப்பட்ட பாண்டா கரடிக்கு பிறந்தநாள்

மலேசியாவில் உள்ள வனவிலங்குப் பூங்காவில் பெண் பாண்டா கரடி தனது முதல் பிறந்தநாளைக் கொண்டாடியது. சீனாவிடமிருந்து இரவல் பெறப்பட்ட இந்த குட்டிக் கரடி சற்று சுறுசுறுப்பு குறைந்ததாக சோம்பலில் படுத்துக் கிடந்தாலும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நுவான்...

குன்னூர் அருகே கோவிலுக்குள் புகுந்து உலா வந்த கரடி

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கோவிலுக்குள் கரடி புகுந்ததால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். சோகத்தொரை கிராமத்தில் உள்ள கோவில் கதவின் பூட்டை உடைக்க முயற்சி செய்தது மட்டுமின்றி, அங்கிருந்த எண்ணெயை குடித்து விட்டு ஓசை எழுப்பிய வண்ணம் இருந்தது. இதனைக் கண்ட அப்பகுதி...

மரத்தின் மீது ஏறி படுத்துறங்கிய கரடி குட்டி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மரத்தின் மீது ஏறிய குட்டியை பார்த்து, தாய் கரடி சத்தம் எழுப்பிக் கொண்டிருந்ததால், பொதுமக்கள் அச்சமடைந்தனர். கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில்,...

கரடி கூட்டத்தில் சிக்கிய காவல் உதவி ஆய்வாளர் ..! மணல் கடத்தல் கும்பல் என ஏமாந்தார்

நாகர்கோவில் அருகே நள்ளிரவில் மணல் கொள்ளையை தடுக்க சென்ற காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் , இருட்டில் கும்பலாக நின்ற கரடிகளை மணல் கடத்தல்காரர்கள் என நினைத்து பிடித்ததால், கரடியிடம் சிக்கிக் கொண்ட சம்பவம்  நிகழ்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே பொய்கை...

ஊஞ்சல் மீது ஏறி விளையாட ஆசை கொண்ட கரடிக்குட்டிகள்

ஊஞ்சல் ஆடி விளையாட மகிழ்ந்த கரடிக்குட்டிகளின் ஆசை நிராசையானது. விலங்கியல் பூங்கா ஒன்றில் இரண்டு கரடிக்குட்டிகள் விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது அதன் அருகில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் இரண்டு குட்டிகளும் ஏறி அமர்ந்து கொண்டன. அப்போது கரடியில் ஒன்று மேலும் உற்சாகமாகி தொடர்ந்து ஏறியதால்...

குன்னூர்-கோத்தகிரி சாலையில் கரடி நடமாட்டம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் - கோத்தகிரி சாலையில் கரடியின் நடமாட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். குன்னூர், கோத்தகிரி, தூதூர்மட்டம் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடியிருப்பு பகுதி மற்றும் தேயிலை தோட்டங்களில் சர்வ சாதாரணமாக கரடிகளின் நடமாட்டம் நாளுக்குநாள்...

தன் உயிரைக் கொடுத்து குட்டிகளைக் காப்பாற்றிய தாய் கரடி

ரஷ்யாவில் ரயில் வரும் போது தண்டவாளத்தில் ஓடி, தனது உயிரைக் கொடுத்து குட்டிகளைக் காப்பாற்றிய கரடியின் செய்கை நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சாகா குடியரசுப் ((Saka Republic)) பகுதியில் வனப்பகுதிக்கு நடுவே ரயில்வே பாதை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்...

ரஷ்யாவில் சர்க்கஸ் நிகழ்ச்சியில் பயிற்சியாளரை தாக்கிய கரடி

ரஷ்யாவில் சர்க்கஸ் நிகழ்ச்சியில் கொடுமைப்படுத்திய  பயிற்சியாளரை கரடி தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. வோல்கோகிரேட் (Volgograd)  பகுதியில் நடைபெற்ற சர்க்கஸில் கரடியை சாய்வுதளத்தில் ஸ்கேட்டிங் சாகசம் நடத்துமாறு பயிற்சியாளர்கள் பணித்தனர். முதலில் சரியாக செய்த கரடி மறுமுறைக்கு ஸ்கேட்டிங்செல்ல மறுத்தது. இதைக் கட்டுப்படுத்த முயன்ற...

சீனாவில் பார்வையாளர்களைக் கவரும் பான்டா கரடிக்குட்டிகள்

சீனாவில் பார்வையாளர்களுக்கு திறந்து விடப்பட்ட பாண்டா கரடிக்குட்டிகளின் சேட்டைகள் காண்போரை கவர்ந்து வருகின்றன. ஷாங்காய் வனஉயிரின பூங்காவில் ஒரு வயது நிரம்பிய யூயூ மற்றும் பான் பான் என்று பெயரிடப்பட்ட இரண்டு பாண்டா கரடிக்குட்டிகள் தற்போது பார்வையாளர்களுக்கு திறந்து விடப்பட்டுள்ளன. 70 கிலோ எடை...