​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் தொல்லை இருப்பது உண்மைதான், போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஒப்புதல்

மதகுருமார்கள் மற்றும் பிஷப்புகள் சிலர், கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மைதான் என கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் ஒப்புக் கொண்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்றுவிட்டு கத்தார் செல்லும் வழியில் போப் பிரான்சிஸ், விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்தியா உள்ளிட்ட...

கேரளாவில் பாலியல் புகாருக்கு ஆளான பிஷப்புக்கு எதிராக போராட்டம், 4 கன்னியாஸ்திரிகளை பணி நீக்கம் செய்ய நோட்டீஸ்

கேரள மாநிலத்தில் பாலியல் புகாருக்கு ஆளான பிஷப்புக்கு எதிராக போராட்டம் நான்கு கன்னியாஸ்திரிகளை பணி நீக்கம் செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த கன்னியாஸ்திரியை பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிஷப்பாக பணியாற்றிய பிராங்கோ மூலக்கல் என்ற பாதிரியார் பாலியல் பலாத்காரம் செய்ததாக...

பாதிரியார்கள் பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்க வேண்டும் - போப்

பிரம்மச்சரியத்தை பின்பற்ற முடியாதவர்கள், தேவாலய பாதிரியார் பணிகளில் இருந்து விலகி விட வேண்டும் என போப் ஆண்டவர் பிரான்ஸிஸ் வலியுறுத்தியுள்ளார். கத்தோலிக்க திருச்சபைகளுக்கு பாதிரியார்களை தேர்வு செய்யும்போது, வழிமுறைகளை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், புதிய புத்தகம் ஒன்றில்,...

முன்னாள் பேராயர் பிராங்கோ மீதான பாலியல் புகாரின் முக்கிய சாட்சியான பாதிரியார் திடீர் மரணம்

ஜலந்தர் முன்னாள் ஆயர் பிராங்கோ மீதான கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய சாட்சியான பாதிரியார் குரியாக்கோஸ் மர்மமான முறையில் மரணமடைந்தார்.  பிராங்கோ கேரளத்தில் பணியாற்றியபோது தன்னைப் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கன்னியாஸ்திரி ஒருவர் தெரிவித்தார். இதையடுத்து பிராங்கோ மீது வழக்குப்...

பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் பேராயர் ஃபிராங்கோவுக்கு ஜலந்தரில் வரவேற்பு

கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் பேராயர் ஃபிராங்கோவுக்கு ஜலந்தரில் ரோஜா மலர் இதழ்களை தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. கேரளாவில் கன்னியாஸ்திரியை பல முறை பலாத்காரம் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து, ஜலந்தர் மறைமாவட்ட பேராயராக...

கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் முன்னாள் பேராயர் ஃபிராங்கோ முல்லக்கலுக்கு ஜாமீன்

கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் புகாரில், கைதான முன்னாள் பேராயர் ஃபிராங்கோ முல்லக்கல் கேரளாவுக்குள் நுழையக் கூடாது என்ற நிபந்தனையுடன் அம்மாநில உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. ஜலந்தர் மறைமாவட்ட பேராயராக இருந்த பிராங்கோ முல்லக்கல் கேரளாவில் பணியாற்றிய போது தம்மை 2...

கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட ஃபிராங்கோ முல்லக்கலின் ஜாமீன் மனு நிராகரிப்பு

கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட முன்னாள் ஆயர் ஃபிராங்கோ முல்லக்கலின் ஜாமீன் மனுவை கேரள உயநீதிமன்றம் நிராகரித்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரியை 13 முறை பலாத்காரம் செய்ததாக ஜலந்தரில் ஆயராக இருந்த ஃபிராங்கோ முல்லக்கல் மீது குற்றம்சாட்டப்படுகிறது. இவர்,  கடந்த...

கன்னியாஸ்திரியைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பிராங்கோ முலக்கல்லை அக். 6வரை காவலில் வைக்க உத்தரவு

கன்னியாஸ்திரியைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முன்னாள் ஆயர் பிராங்கோ முலக்கல்லை அக்டோபர் 6வரை சிறையில் அடைக்க கோட்டயம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிராங்கோ  தன்னை 13முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கோட்டயம் மாவட்டம் குறவிளங்காட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக வழக்குப்...

ஃப்ராங்கோ முலக்கல்லுக்கு எதிராகப் போராடிய கன்னியாஸ்திரிக்கு தேவாலயப் பணிகளில் இருந்து விலகியிருக்க உத்தரவு

கேரள கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் சிக்கிய முன்னாள் ஆயர் ஃப்ராங்கோ முலக்கல்லுக்கு எதிராகப் போராடிய கன்னியாஸ்திரி தேவாலயப் பணிகளில் இருந்து விலகியிருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முலக்கல்லுக்கு எதிராக நடவடிக்கை கோரி கடந்த ஒருவாரமாக கொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கன்னியாஸ்திரிகள், அவர் கைது...

கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில், ஃபிரான்கோ முலக்கலுக்கு செப்.24 வரை போலீஸ் காவல்

கேரளாவில் கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் பேராயர் ஃபிரான்கோ முலக்கலை வரும் 24 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஜலந்தர் பேராயராக இருந்த ஃபிராங்கோ முலக்கலை கைது செய்ய...