​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

புயல் பாதித்த மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகள் மூலம் உதவிப் பொருட்களை அனுப்பக் கட்டணம் இல்லை

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகள் மூலம் உதவிப் பொருட்களை அனுப்புவதற்குக் கட்டணம் கிடையாது எனப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்குத் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து பால், அரிசி, போர்வை, வீட்டுப்...

புயல் பாதித்த மாவட்டங்களில் அபராதமின்றி நவம்பர் 30 வரை மின்கட்டணம் செலுத்தலாம் என அறிவிப்பு

புயல் பாதித்த மாவட்டங்களில் நவம்பர் 30வரை அபராதமின்றி மின் கட்டணம் செலுத்தலாம் எனத் தமிழ்நாடு மின்னுற்பத்தி, பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் மின்கட்டணம் செலுத்துவதற்கு மாதத்தின் 15ஆம் தேதி கடைசி நாளாகும். 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையாகவோ அரசு விடுமுறை நாளாகவோ இருந்தால் அதையடுத்த...

கஜா புயலினால் மின்விநியோகம் தடை - செல்போன்கள், இன்வெர்ட்டர் பேட்டரிகளை சார்ஜ் செய்ய திண்டாட்டம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கஜா புயலினால் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதால், செல்போன் மற்றும் இன்வெர்ட்டர் பேட்டரிகளை சார்ஜ் செய்ய பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஜா புயலின் போது வீசிய பலத்த காற்றால் மின்விநியோகம் முற்றிலுமாக தடைப்பட்டது....

VGN அடுக்குமாடி குடியிருப்பில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தராமல் அதிகபடியான பராமரிப்பு கட்டணம் வசூல் செய்வதாக புகார்

சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள விஜிஎன் என்ற கட்டுமான நிறுவனம் உறுதி அளித்த அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தராமல் அதிகபடியான பராமரிப்பு கட்டணம் வசூல் செய்வது தொடர்பான பிரச்சனையில் பெண் ஒருவர் தாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. திருமுல்லைவாசல் நகரில், விஜிஎன் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது....

சினிமா டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதாக சின்மயி தகவல்

சினிமா டப்பிங் சங்கத்தில் இருந்து தாம் நீக்கப்பட்டுள்ளதாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட தகவலில், 2 வருட சந்தா கட்டணம் செலுத்தாததால் தகவல் தெரிவிக்காமலேயே தம்மை நீக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். டப்பிங் சங்கத்தில் உறுப்பினராக இல்லாதவர்கள், படங்களில் பணியாற்ற...

குழாய்ப்பாதைக்கான கட்டணத்தை 30 சதவீதம் வரை உயர்த்த முடிவு

இந்தியாவில் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு  குழாய்ப்பாதைகளுக்கான கட்டணம் 25முதல் 30விழுக்காடு வரை உயர்த்தப்பட உள்ளது. இந்தியாவில் எண்ணெய், எரிவாயு ஆகியவற்றைக் குழாய்ப்பாதை வழியாகக் கொண்டுசெல்வதற்கான கட்டணத்தைப் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்காற்று வாரியம் தீர்மானிக்கிறது. இந்த வாரியம் ஏற்கெனவே 7 குழாய்ப்பாதைகளுக்கான...

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இரண்டாம் காலாண்டில் 389கோடி ரூபாய் நட்டம்

எரிபொருள் விலையேற்றம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றால் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 389கோடி நட்டம் அடைந்துள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடந்த நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் 105கோடி ரூபாய் இலாபம் ஈட்டியிருந்தது. நடப்பாண்டில் அதன் எரிபொருள் செலவு மட்டும் 56விழுக்காடு...

பச்சை குத்தினால் உயிர் கொல்லி நோய்...! மருத்துவர் எச்சரிக்கை

ஒரே ஊசியை பலருக்கும் பயன்படுத்தி, உடலில் டாட்டூ என்ற பச்சை குத்திவிடுவதால், பச்சை குத்திக் கொள்ளும் நபர்களுக்கு உயிர் கொல்லி நோய் பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர் உடலில் பச்சை குத்தி கொள்வதெல்லாம் நோய் எதிர்ப்பு சக்தி என்று இருந்த நம்பிக்கை...

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்க டாட்டா சன்ஸ் தொடர்ந்து பேச்சுவார்த்தை

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்க டாட்டா சன்ஸ் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறது. கடும் நிதி நெருக்கடியில் உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்க டாட்டா சன்ஸ் பேச்சு நடத்தி வருவதாக மின்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஜெட் ஏர்வேஸ்...

விவசாயிகளுக்கான மின் கட்டணம் 50 சதவிதம் குறைக்கப்படும் - காங்கிரஸ்

மத்திய பிரதேசத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கான மின் கட்டணம் பாதியாக குறைக்கப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் வரும் 28ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, பிரச்சாரம் அனல்பறக்கும் நிலையில், தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள...