​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கருத்து கேட்பு கூட்டத்தில், மின்கட்டண உயர்வைக் கண்டித்து முழக்கமிட்ட பொதுமக்கள் கைது

புதுச்சேரியில் நடைபெற்ற மின்சார ஒழுங்குமுறை இணை ஆணைய கருத்து கேட்பு கூட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து முழக்கமிட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி கைது செய்தனர். புதுச்சேரி மாநில கூட்டுறவு ஒன்றிய கட்டிடத்தில், இணை மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் எம்.கே. கோயல்...

தாஜ்மகாலுக்குள் செல்வதற்கான நுழைவுக் கட்டணம் ரூ.250 அதிகரிக்கப்பு

தாஜ்மகாலுக்குள் செல்வதற்கான நுழைவுக் கட்டணம் 250 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. தாஜ்மகாலை சுற்றிப் பார்க்க இந்தியர்களுக்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தாஜ்மகாலை பார்க்க இந்தியர்களுக்கான நுழைவு கட்டணம் 250 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினருக்கு இந்தக் கட்டணம் ஆயிரத்து 300 ரூபாயாக...

திருவண்ணாமலை சிறப்பு பேருந்தில் கூடுதல் கட்டணம்..!

சென்னை தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு புறப்பட்ட அரசு சிறப்பு பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பயணச்சீட்டு எடுக்க மறுத்து பயணிகள் போராடியதால் பேருந்து நடுவழியில் நிறுத்தப்பட்டது. சென்னையில் இருந்து திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்கு ஆயிரகணக்கான பக்தர்கள் புறப்பட தொடங்கி இருக்கும் நிலையில் அரசு பேருந்தில்...

குழாய்ப்பாதைக்கான கட்டணத்தை 30 சதவீதம் வரை உயர்த்த முடிவு

இந்தியாவில் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு  குழாய்ப்பாதைகளுக்கான கட்டணம் 25முதல் 30விழுக்காடு வரை உயர்த்தப்பட உள்ளது. இந்தியாவில் எண்ணெய், எரிவாயு ஆகியவற்றைக் குழாய்ப்பாதை வழியாகக் கொண்டுசெல்வதற்கான கட்டணத்தைப் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்காற்று வாரியம் தீர்மானிக்கிறது. இந்த வாரியம் ஏற்கெனவே 7 குழாய்ப்பாதைகளுக்கான...

தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பேருந்துக் கட்டணம் உயர்வு

தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளன.  செய்தியாளர்களிடம் பேசிய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க பொருளாளர் திருஞானசம்பந்தம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக ஆம்னி பேருந்து கட்டணங்களை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். வார விடுமுறை நாட்களுக்கான பேருந்துக்...

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு திமுக ஆதரவு

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரலாறு காணாத பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, ஜிஎஸ்டி சட்டத்தின் முறையற்ற செயல்பாடு, சுங்கக் கட்டண...

தொடர் விடுமுறை..! தாறுமாறாக தனியார் பேருந்து கட்டண உயர்வு... சொந்த ஊர் செல்லும் பயணிகள் அவதி

தொடர் விடுமுறையைக் கழிக்க பொதுமக்கள் அதிகளவில் சொந்த ஊர் செல்வதைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் பேருந்துகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதாகப் புகார் எழுந்துள்ளது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது....

தீபாவளி உள்ளிட்ட திருவிழா கால கூட்ட நெரிசலை சமாளிக்க 15 சிறப்பு ரயில்கள்..!

தீபாவளி உள்ளிட்ட விடுமுறை காலத்தில் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பேருந்து கட்டண உயர்வு மற்றும் திருவிழாக் கால விடுமுறை ஆகியவற்றின் காரணமாக ரயில்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால்...

மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை உயர்த்த ஸ்டாலின் எதிர்ப்பு

மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை ஆயிரம் ரூபாயில் இருந்து ஆயிரத்து 300 ரூபாயாக அதிகரிக்கும் முயற்சியை கைவிடுமாறு தமிழக அரசை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஏழை, எளிய நடுத்தர மக்களின்  பேருந்துப் பயண அட்டைக் கட்டண உயர்வு, மேலும் இழப்புகளை ஏற்படுத்தி...

ஆசியாவிலேயே பெங்களூருவில் தான் அலுவலகங்களுக்கான வாடகை உயர்வு - புள்ளிவிவரத்தில் தகவல்

அலுவலகங்களுக்கான கட்டிட வாடகை தொகை உயர்வு அடிப்படையில், ஆசியாவிலேயே பெங்களூரு முதலிடத்தில் இருப்பது புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது. நைட் ஃபிராங்க் (knight frank) என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின் படி, ஏப்ரல் தொடங்கி ஜூன் வரையிலான இரண்டாம் காலாண்டில், ஆசிய நாடுகளில் உள்ள...