​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அரசு பள்ளிகளில் ஏப். 1 முதல் மாணவர் சேர்க்கை நடத்த பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசுப்பள்ளிகளில் ஏப்ரல் ஒன்றாம் தேதியே எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். மாற்றுச்சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்கள் இல்லாவிட்டாலும் மாணவர் சேர்க்கையை...

பழனி கோவில் ஆக்ரமிப்புகளை புதன்கிழமை மாலைக்குள் அகற்ற உத்தரவு

பழனி கோவில் மற்றும் கிரிவலப்பாதையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை புதன்கிழமை மாலைக்குள் அகற்ற திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வசதிகளை செய்து கொடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கும்படி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்...

அரசு மருத்துவமனைகளில் தானமாக பெறப்படும் உடலுறுப்புகள், தனியார் மருத்துவனைகளுக்கு வழங்கப்படுவது எப்படி?: நீதிபதிகள்

அரசு மருத்துவமனைகளில் தானமாகப் பெறப்படும் உடலுறுப்புகள் தனியார் மருத்துவமனைகளுக்கு எவ்வாறு? எப்படி? வழங்கப்படுகின்றன என உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது.  மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழ்நாட்டில், சென்னை, மதுரை,...

ரசாயான தொழிற்சாலை தாமிரபரணியில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கிறதா?- ஆய்வு செய்ய உத்தரவு

தூத்துக்குடி தா.ரங்கதாரா ரசாயான தொழிற்சாலை தாமிரபரணியில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கிறதா? என ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையர் நியமித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த தொழிற்சாலை அனுமதியின்றி ராட்சத மோட்டார் நீரேற்று நிலையம் மூலம் பல ஆண்டுகளாக தண்ணீர் எடுப்பதால் அரசுக்கு...

பெரிய வியாழனையொட்டி தேர்தலை தள்ளிவைக்கக் கோரி மனு,தேர்தல் ஆணையம் நாளை பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

பெரிய வியாழன் பண்டிகை காரணமாக, கிறிஸ்தவ பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளை வேறு பள்ளிகளுக்கு மாற்ற கோரிய வழக்கில், இந்திய தேர்தல் ஆணையம் நாளை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடத்தப்படவுள்ள...

பா.ஜ.க. ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்கள் - திமுக அறிக்கை குறித்து தமிழிசை கருத்து

பா.ஜ.க. ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்களை புதிதாக நடைமுறைப்படுத்தப் போவதைப் போன்று பொய்யான அம்சங்களுடன் தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு விவகாரத்தில் நீதிமன்ற...

நீரவ் மோடியைக் கைது செய்ய இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு என தகவல்

லண்டனில் தலைமறைவாக இருக்கும் நீரவ் மோடியைக் கைது செய்ய இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வைரவியாபாரி நீரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும் தலைமறைவாகினர். இதனைத்...

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக நடைமுறை படுத்த உத்தரவு

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையான முறையில் நடைமுறை படுத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இதுவரையில்...

நகை மதிப்பீட்டாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் - இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவு

இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள நகை மதிப்பீட்டாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்பி, நகைகளை மதிப்பீடு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ராமேசுவரத்தை சேர்ந்த எஸ்.பக்சி சிவராஜன் தாக்கல் செய்த மனுவில், ராமநாதசுவாமி கோயிலில் அருள்பாலிக்கும் பர்வதவர்த்தினி அம்மனுக்கு அணிவிக்கப்படும் வைரத் தாலி,வைர...

அரசு தொடக்கப்பள்ளிகளில் அரசு செலவில் வாங்கப்பட்ட நாளிதழ்கள், எடைக்கு விற்று பணத்தை ஒப்படைக்க தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் அரசு செலவில் வாங்கப்பட்ட நாளிதழ்களை எடைக்கு விற்று பணத்தை ஒப்படைக்க தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளுக்கும் 2018 - 2019-ஆம் கல்வியாண்டில் மாணவர்களின் பொது...