​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் எரிவாயு தீரும் நிலையில் உள்ளதாக தகவல்

கிருஷ்ணா கோதாவரி ஆற்றுப் படுகையில் உள்ள முக்கிய கிணறுகளில், இயற்கை எரிவாயு தீரும் நிலையில் உள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கூறியுள்ளது. ஆந்திராவில் 50 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்...

25000 வியாபாரிகளிடம் ரூ 400 கோடி சுருட்டல்..! திரிபுரா சீட்டு மோசடி

சென்னையில், திரிபுரா சீட்டுக்கம்பெனியில் பணம் கட்டிய 25 ஆயிரம் வியாபாரிகள், 400 கோடி ரூபாயை இழந்து தவிப்பதாக வியாபாரிகள் சங்க பேரவையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். குருவி சேர்ப்பது போல சேர்த்த பணத்தை, கர்நாடகத்தைச் சேர்ந்த சீட்டு மோசடிக் கும்பலிடம் இழந்த பின்னணி குறித்து...

தக்காளி விலை தலைநகரில் கிலோ 80 ரூபாயாக அதிகரிப்பு

டெல்லியில் கிலோ தக்காளி விலை 80 ரூபாயாக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இருந்து வரும் தக்காளி டெல்லியில் விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திரா, மகாராஷ்ட்ரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், உத்தரப்பிரதேசத்தில் இருந்தும் கொண்டுவரப்படுகின்றன. வழக்கமாக 20 முதல்25 ரூபாய்க்கு விற்கப்படும் தக்காளி...

ஆந்திரா கிளப் தேர்தல் : கிரிக்கெட் மட்டையால் தாக்கும் சிசிடிவி காட்சி..!

சென்னை தியாகராய நகரில் உள்ள ஆந்திரா கிளப்பில் தேர்தல் தொடர்பான தகராறில் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்டவரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய சம்பவம் தொடர்பாக தொழில் அதிபர் கூலிப்படையுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை தியாகராய நகரில் ஆந்திரா கிளப் உள்ளது. இங்கு சுப்பாரெட்டி என்பவர்...

காரில் “வழக்கறிஞர்” ஸ்டிக்கர் ஒட்டி கஞ்சா கடத்தல்

சென்னையில் வாடகைக்கு காரை எடுத்து, அதில் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை கடத்திச் சென்ற உடன் பிறந்த சகோதரர்களை உளுந்தூர்பேட்டை அருகே போலீசார் மடக்கிக் கைது செய்தனர். ஜி.பி.எஸ் கருவி மூலம் போலீசிடம் சிக்கிய கடத்தல்காரர்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி... திண்டுக்கல்லைச் சேர்ந்த உடன்பிறந்த...

ஆந்திரா தலைநகர் அமராவதி கட்டுமானப் பணிகளுக்கு கடன் இல்லை - கைவிரித்த உலக வங்கி

ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதியை கட்டமைக்க 2 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்குவதாக தெரிவித்திருந்த உலக வங்கி அதனை ரத்து செய்து விட்டது. உலக வங்கியின் இயக்குனர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை அறிவித்த செய்தித் தொடர்பாளர் சுதீப் மஜூம்தார், மேலும்...

ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு கஞ்சா கடத்திய 7 பேர் கைது

ஆந்திராவில் இருந்து கடத்தப்பட்ட 46 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கிழக்கு கோதாவரி மாவட்டம் ராவுலபாளையம் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, வாகனம் ஒன்றில் கஞ்சா கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வாகனத்தில் வந்த ஏழு பேரை...

இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியவன் கைது

சென்னை புளியந்தோப்பில் இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியவன் ஆந்திராவில் கைது செய்யப்பட்டான். ஓட்டேரியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தமக்கும் புளியந்தோப்பை சேர்ந்த டில்லிராஜ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், தன்னை...

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இணையதளத்தில் தமிழிலும் பதிவேற்றம் செய்யப்பட்டது

 முக்கிய வழக்குகளில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகள், தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் அனைத்தும் அதன் இணையதளத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தன. ஆனால் மனுதாரர்களுக்கு வசதியாக இருக்கும் வண்ணம், அந்தந்த மாநில மொழிகளில் தீர்ப்புகளை பதிவேற்றம்...

பள்ளிக்குழந்தைகளை அடித்து கொடுமைப்படுத்தும் தலைமை ஆசிரியர்

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அரசுப்பள்ளி ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கிப் படிக்கும் குழந்தைகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. சங்கவாக்கா என்ற கிராமத்தில் அமைந்துள்ள அந்தப் பள்ளியின் விடுதியில் ஏழைக் குழந்தைகள்...