​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தெர்மாகோல் தயாரிக்கும் நிறுவனத்தில் தீவிபத்து

சென்னை அருகே தர்மாகோல் தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. மதுரவாயல் அருகே ஆலப்பாக்கம் என்னும் இடத்தில் உள்ள, உலகநாதன் என்பவருக்கு சொந்தமான இந்த நிறுவனம் 10 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்துக்கு அருகே மின்மாற்றி...

காதலித்து விட்டு திருமணத்திற்கு மறுத்த காதலன் மீது ஆசிட் வீச்சு

காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது இளம்பெண் ஆசிட் வீசிய சம்பவம் டெல்லியில் அரங்கேறி உள்ளது. விகாஸ்பூரி என்ற இடத்தில் மருத்துவமனை ஒன்றில் இளம்பெண் ஒருவரும், இளைஞரும் காயங்களுடன் சிகிச்சை பெற வந்திருந்தனர். இதுபற்றி தகவலறிந்த போலீசார் அந்தப் பெண்ணிடம் நடத்திய விசாரணையில்...

முழுமையாக குணப்படுத்தாமல் அனுப்பி வைத்து விட்டதாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மீது புகார்

சென்னை கோயம்பேட்டில் அமில வீச்சுக்குள்ளானவர்கள், ஆறாத காயங்களுடன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மீது சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளனர்.  கோயம்பேடு முனியப்பா நகரில் கன்னியப்பன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். நகை பட்டறையில் பணிபுரியும் கன்னியப்பனின் வீட்டிற்கு எதிர் வீட்டில், கோயம்பேடு...

உத்தரபிரதேசத்தில் இளம் பெண் மீது ஆசிட் வீச்சு

உத்தரபிரதேச மாநிலத்தில் காவல்துறையில் சேர தகுதி பெற்ற பெண் மீது திராவகம் வீச்சால் படுகாயம் அடைந்துள்ளார். அந்த மாநிலத்தில் ரேபரேலி மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது பெண், ஒரு சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்,...

தேர்தல் பிரச்சாரத்தில் நடிகை ஜெயப்பிரதா கண்ணீர் விட்டு கதறல்

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்புர் தொகுதியில் போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதா மேடையில் கண்ணீர் விட்டு அழுதார். தாம் ராம்புரை விட்டுச் செல்ல விரும்பவில்லை என்றும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அசாம் கான் குண்டர்களை ஏவி தம்மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறிய ஜெயப்பிரதா தமது முகத்தில்...

இளம்பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டிய கயவன் கைது

சென்னையில் இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய எம்.பி.ஏ பட்டதாரி இளைஞர், அந்த பெண்ணோடு தனிமையில் இருந்தபோது எடுத்த வீடியோவை வைத்து மிரட்டி வந்த நிலையில், கைது செய்யப்பட்டிருக்கிறான். திருவள்ளூர் மாவட்டம் பத்தியால் பேட்டையைச் (Pathiyal Pettai) சேர்ந்த ஜெயபிரகாஷ் எம்.பி.ஏ பட்டதாரி ஆவான்.  இவன், திருநின்றவூரில்...

குடிநீர் என நினைத்து ஆசிட்டை குடித்த பள்ளி மாணவி - சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாணவி

டெல்லியில், குடிநீர் என நினைத்து ஆசிட்டை குடித்த பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி, ஹார்ஷ் விகார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், 4 மற்றும் 5வது படிக்கும் மாணவிகள் மதிய உணவுவின் போது ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். அப்போது,...

நீதிமன்றத்தில் ஆஜராக வந்திருந்த மருத்துவர் மீது கள்ளக்காதலி ஆசிட் வீச முயற்சி

திருப்பதியில் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வந்திருந்த மருத்துவர் மீது கள்ளக்காதலி ஆசிட் வீச முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பதியை சேர்ந்த மருத்துவர் ஆதர்ஷ், மனைவியை பிரிந்து வாழும் நிலையில், செவிலியரான அருணாகுமாரியிடம் முறையற்ற உறவு இருந்ததாக கூறப்படுகிறது. திடீரென்று...

மறுமணம் செய்ய மறுத்த விதவைப் பெண் மீது ஆசீட் வீச்சு

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே ஆசிட் வீச்சுக்குள்ளான விதவைப் பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் மீது ஆசிட் வீசிய நபர் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார். திருவட்டாறு அருகே உள்ள ஏற்றக்கோட்டைச் சேர்ந்த கிரிஜா கணவனை இழந்த நிலையில்...

பத்திரிக்கையாளர் கசோக்கியின் உடல் பாகங்கள் உள்ள பெட்டிகளை இடம் மாற்றுவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியீடு

சவூதி தூதரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் உடல் பாகங்களை இடம் மாற்றப்படுவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சவூதி பட்டத்து இளவரசரை விமர்சித்து வந்த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி, கடந்த அக்டோபர் மாதம் துருக்கியில் உள்ள சவூதி தூதரகத்துக்கு...