​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

எரிவாயு சிலிண்டர் வெடித்து தாய், 2 குழந்தைகள் பரிதாப பலி

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கடந்த வாரம் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ பற்றியதில் தாய் மற்றும் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். கடந்த 17ஆம் தேதி இலுப்பூர் வெட்டுக்காடு கிராமத்தில் பொன்னுமணி என்பவர் சிலிண்டரில் ஏற்பட்ட எரிவாயு கசிவை அறியாமல் அடுப்பை...

அரசு மருத்துவமனையை, வேறு கிராமத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்

திருவள்ளூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை வேறு கிராமத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை, புதியதாக மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார...

குழந்தை வரத்திற்கு பவுர்ணமி பூஜை மோசடி மந்திரவாதி...! காஞ்சியில் திகில்

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே குழந்தையில்லா தம்பதியிடம் பவுர்ணமி பூஜை செய்வதாகக் கூறி கணவனை பயங்கரமாக தாக்கி, மனைவியிடம் 10 சவரன் நகையை பறித்துச்சென்ற போலி மந்திரவாதியை காவல்துறையினர் தேடிவருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் இவரது...

பேட்ட தியேட்டரில் ரஜினி ரசிகர் கொலை..! புகை பகையான விபரீதம்..

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் பேட்ட படம் பார்க்கும் போது திரையரங்கில் புகைபிடித்த ரஜினி ரசிகர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில் உள்ள லதாங்கி திரையரங்கில் வைத்து தான் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்ததாக கூறப்படுகின்றது. உடுமலை...

சென்னையில் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்த முகமூடி கொள்ளையர்கள்

சென்னை விருகம்பாக்கத்தில் இளைஞர்களை கத்தியால் தாக்கி வழிப்பறி செய்த முகமூடி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  விருகம்பாக்கம் காந்தி நகர் மெயின் ரோட்டைச் சேர்ந்த ஹாராஜ் கான் என்ற இளைஞர் அதேபகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று அதிகாலை...

ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து புளிய மரத்தின் மீது கார் மோதி விபத்து - 4 பேர் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே புளியமரத்தின் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்த 7 பேர் ஒரு காரில்  குடியாத்தம் அடுத்த மேல் ஆலத்தூர் பகுதியில் நடக்கும் முஸ்லிம் மாநாட்டில் பங்கேற்று...

செயற்கையை இயற்கையாக மாற்றிய ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையைச் சுற்றிலும் கிடந்த தண்ணீர் கேன்களை சேகரித்த மருத்துவ மாணவர்கள், அவற்றை தங்கள் கைவண்ணத்தால் இயற்கைக்கான ஆதரமாக மாற்றி அசத்தியுள்ளனர்.  சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்....

பைனான்சியர் குத்திக் கொலை

பொள்ளாச்சி அருகே கடன்வாங்கியவரின் மனைவியை அபகரித்து சென்றதாக, பைனான்சியர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளக்காபாளையத்தை சேர்ந்தவர் கார் ஓட்டுனர் குணசேகரன். இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். குணசேகர், கடந்த...

கணவரின் தவறான தொடர்பை கண்டித்த மனைவியை காதலியுடன் சேர்ந்து தாக்கிய கணவன்

திண்டுக்கல் அருகே தனது கணவரின் தவறான தொடர்பை கண்டித்த மனைவியை   காதலியுடன் சேர்ந்து கணவன் தாக்கிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகேயுள்ள கிழக்கு காப்பிலியபட்டியைச் சேர்ந்தவர் சற்குணம் இவரது மனைவி சரண்யா இந்த தம்பதிக்கு 2...

கடன் வாங்கிய பணத்தை திரும்பக் கேட்டதால் பைனான்சியர் தலையில் கல்லைப் போட்டு கொலை

புதுச்சேரியில் கடன் வாங்கிய பணத்தை திரும்பக் கேட்டதால் பைனான்சியரை மதுபோதையில் நண்பர்களுடன் சேர்ந்து தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.  கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ராமலிங்கம் என்பவர், வட்டிக்கு கடன் அளிக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று...