​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வரும் கல்வியாண்டு முதல் பிளஸ் டூ படித்த அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதி - அமைச்சர் செங்கோட்டையன்

வரும் கல்வியாண்டு முதல் பிளஸ் டூ படித்த அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதி என்ற அடிப்படையில் கல்வி மாற்றி அமைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர்...

சாதிகள் உள்ளவரை நல்லிணக்கத்திற்கு இடமில்லை - பிரதமர் மோடி

சாதி ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகத்தில் தான் நல்லிணக்கம் நீடிக்க முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வாரணாசியில் அவர் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தமது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு சுமார் 3...

இந்தியா- சவுதி அரேபியா இடையே இன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன

இந்தியா- சவுதி அரேபியா இடையே இன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான், இரண்டு நாள் அரசுமுறை பயணமாக நேற்று டெல்லி வந்தார். விமான நிலையத்தில் பிரதமர் மோடி அவரை நேரில் வரவேற்றார். குடியரசுத் தலைவர், குடியரசுத்...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி, நடப்பு ஆண்டின் ஜனவரி ஒன்றாம்...

நேபாள நிலநடுக்கத்தில் இந்திய மீட்பு படை செய்த உதவிக்காக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு விருது

நேபாள நிலநடுக்கத்தில் சிக்கிய ஸ்பெயின் மக்களை இந்திய மீட்பு படையினர் காப்பாற்றியதற்காக, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு விருது வழங்கி ஸ்பெயின் அரசு கவுரவித்துள்ளது. நேபாளத்தில் 2015 ஆம் ஆண்டு நிகழ்ந்த நிலநடுக்கத்தின் போது சுமார் 9000 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த...

சுயலாபத்திற்காக சாதிவேறுபாடுகளை தூண்டுவோரை அடையாளம் காணுங்கள் - பிரதமர் மோடி

சுயநலத்திற்காக சாதி வேறுபாடுகளை தூண்டி விடுவோரை மக்கள் அடையாளம் காண வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் மறைந்த பக்தி இயக்க கவிஞரான துறவி ரவிதாசின் பிறந்த இடத்தில் நினைவாலயம் கட்ட அடிக்கல் நாட்டி பேசிய அவர்...

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு உடல்நலக்குறைவு

உடல் நலக்குறைவு காரணமாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலைமை செயலகத்தில் இருந்த போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவால் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து உடடினயாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அமைச்சருக்கு...

உயிர் தியாகம் செய்த சுப்பிரமணியனுக்கு வைகோ அஞ்சலி

தீவிரவாத தாக்குதலில் உயிர் தியாகம் செய்த தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கண்கலங்கினார். சுப்பிரமணியனின் இல்லத்துக்குச் சென்ற அவர், வீரரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அப்போது...

தனியார் விடுதி அறையில் காதலன் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை

உதகைக்கு சுற்றுலா வந்த காதலர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதால், மனமுடைந்த காதலன் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். மதுரை திருமங்கலத்தை சேர்ந்த இளைய சூரியன் என்ற இளைஞர், கடந்த 16ஆம் தேதி தமது காதலி மேனகாவுடன் உதகைக்கு சுற்றுலா சென்றுள்ளார். பல...

விறுவிறுப்புடன் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

அரியலூர் மாவட்டம் திருமானூரில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்புடன் நடைபெற்றது. இந்த போட்டியை அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டில் தஞ்சை, திருச்சி, கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 650 காளைகள் களமிறக்கப்பட்டன. வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்து போக்கு...