​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் மூவருக்கு 3ஆண்டு சிறை தண்டனை

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் நிலக்கரித்துறை முன்னாள் செயலர் உள்ளிட்ட மூவருக்கு டெல்லி நீதிமன்றம் மூன்றாண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.  ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது தனியார் நிறுவனங்களுக்குச் நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு...

எழுவரின் விடுதலைக்கு ஆளுநர் காலம் தாழ்த்துவது புரியவில்லை - பேரறிவாளன் தாயார்

ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள எழுவரின் விடுதலைக்கான உத்தரவில் ஆளுநர் கையொப்பமிடவில்லை என்றால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்த இருப்பதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார்....

சிறார்களை பாலியல் ரீதியாக சித்தரிக்கும் ஆபாச கன்டன்ட்டுகளை பரப்பினால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

சிறார்களை பாலியல் ரீதியாக சித்தரிக்கும் ஆபாச கன்டன்ட்டுகளை பரப்பினால் ஜாமீனில் வெளிவர முடியாததுடன் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் வருகிறது. தற்போதுள்ள போக்சோ சட்டத்தின் 15ஆவது பிரிவின்படி, இந்த குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம்...

கணவனை கொன்று கைதான இளம்பெண் மற்றும் கள்ளக்காதலன் சிறையில் அடைக்கப்பட்டனர்

சேலத்தில் கணவனை கொன்று கைதான இளம்பெண் மற்றும் கள்ளக்காதலன் சிறையில் அடைக்கப்பட்டனர். சேலம் அருகே உள்ள கருப்பூரில் செல்வகுமார் என்பவர் கடந்த 10-ம் தேதி அடித்து கொலை செய்யப்பட்டார். குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் அவரது மனைவி ஐஸ்வர்யா தோசைக்கல்லால் தாக்கியதில் செல்வக்குமார் உயிரிழந்தது...

நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரயில் கொள்ளையர்களுக்கு அடையாள அணிவகுப்பு நடத்த அனுமதிக் கோரி சிபிசிஐடி மனு

நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரயில் கொள்ளையர்களுக்கு அடையாள அணிவகுப்பு நடத்த அனுமதிக் கோரி சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். சேலம்-சென்னை ரயில் மேற்கூரையில் துளையிட்டு 5 கோடியே 78 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைதானவர்களில் 5 பேரின் 14 நாள்...

இலங்கையில் சிறையில் உள்ள தமிழ்க் கைதிகள் விடுவிக்கப்பட வாய்ப்பு

இலங்கையில் சிறையில் உள்ள முன்னாள் போராளிகளும் அரசியல் கைதிகளுமான தமிழர்கள் விடுவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக வரும் ஏழாம் தேதி ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர உள்ளது. அப்போது நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக...

65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை முன் கூட்டியே விடுவிப்பது குறித்து பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிடுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை முன் கூட்டியே விடுவிப்பது குறித்து பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிடுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  கைதிகள் மரணம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் வைகை என்பவர் சிறைகளில் ஆய்வு செய்து...

மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத்தின் சிறைத் தண்டனை ரத்து

மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத்தின் சிறைத் தண்டனையை ரத்து செய்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாமீன் அப்துல் கய்யூம் அதிபராக பதவியேற்ற பின் அப்து நஷீத் பயங்கரவாத வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை பெற வெளிநாடு...

ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு 7ஆண்டு சிறை

ஊழல் வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு டாக்கா உயர்நீதிமன்றம் ஏழாண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. வங்கதேசப் பிரதமராக 1991முதல் 1996 வரையும், 2001முதல் 2006வரையும் இருந்தவர் கலீதா ஜியா. அவர் ஏற்கெனவே ஒரு ஊழல் வழக்கில் 5ஆண்டு தண்டனை...

மகாராஷ்டிராவில் சிறையில் பெண் கைதிகள் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேச புதிய வசதி

மகாராஷ்டிராவில் சிறையில் உள்ள பெண் கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசிக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக சிறையில் உள்ள கைதிகள் தங்கள் குடும்பத்தினர், உறவினர்களை, ஸ்மார்ட்போன்களில் வீடியோ காலில் அழைத்து உரையாடும் வசதியை மகராஷ்டிரா அரசு ஏற்படுத்தியுள்ளது....