​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மாறுபட்ட உணவு முறையால் பெண்கள், குழந்தைகளுக்கு பெருங்குடல் மற்றும் மலக்குடலில், புற்றுநோய் ஏற்படும் அபாயம்

மாறுபட்ட உணவு முறை காரணமாக, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், பெருங்குடல் மற்றும் மலக்குடலில், புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக, அப்பல்லோ மருத்துவமனை கூறியிருக்கிறது. இதுதொடர்பான சர்வதேச கருத்தரங்கம் சென்னையில், வெள்ளிக்கிழமை தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில்,...

செவிலியர் பிரசவம் பார்த்தபோது தலை துண்டான குழந்தைக்கு பிரேதப்பரிசோதனை

கூவத்தூர் அரசு மருத்துவமனையில் செவிலியர் பிரசவம் பார்த்தபோது தலை துண்டாகி வெளியே வந்த குழந்தைக்கு பிரேதப்பரிசோதனை நடைபெற்று வருகிறது.  காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று செவிலியர்கள் பிரசவம் பார்த்த போது பொம்மி என்ற கர்ப்பிணியின் குழந்தை தலை...

பாதுகாப்பு அச்சுறுத்தல் - திடீரென மூடப்பட்ட மருத்துவமனை

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நியுசிலாந்தில் உள்ள மருத்துவமனை மூடப்பட்டதால் பதற்றம் நிலவியது. நியுசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் இரு மசூதிகளில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்தனர். இந்த கோரச் சம்பவம் நடந்த மறுநாளான இன்று, ஹாக்ஸ் பே ((Hawke’s Bay)) என்ற இடத்தில்...

பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மீது 2 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து

நாகை மாவட்டம் சீர்காழி அருகே பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மீது இரண்டு கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. வைத்தீஸ்வரன்கோவில் நெடுஞ்சாலையில் சென்னை எண்ணூரிலிருந்து திருவாரூர் நோக்கி 12 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மீது எதிரே...

கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு தகராறு செய்த ரவுடி

கன்னியாகுமரி மாவட்டம் இளஞ்சிறையில் சிறப்பு உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இருமாநில எல்லைப் பகுதியான இளஞ்சிறையிலுள்ள கடை ஒன்றில் பொருட்கள் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி ராஜ்குமார் என்பவன்...

வீடு தீப்பிடித்து எரிந்ததில் தம்பதி பலி

சென்னை கூடுவாஞ்சேரியை அடுத்த ஆதனூரில் வீடு தீப்பிடித்து எரிந்ததில், தம்பதி உடல் கருகி உயிரிழந்தனர். ஆதனூரை சேர்ந்த ரியாஸ், தனது மனைவி தமிழ்செல்வியுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இன்று அதிகாலை திடீரென அவர்களது வீட்டில் தீப்பிடித்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர்...

மூளைச்சாவு அடைந்த சிறுமியின் உடல் உறுப்புகள் தானம்

வேலூரில் மூளைச்சாவு அடைந்த சிறுமியின் உடல் உறுப்புகள் பல்வேறு மருத்துவமனைக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டன. சித்தூர் மாவட்டம் திருப்பதியை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியர் பாலாஜி மகள் லிகிதா. கடந்த சில மாதங்களாக நோய்வாய் பட்டிருந்த அவர், நேற்று திடீரென நுரையீரல் பாதிப்பு...

நோயாளி இறந்ததை தெரிவிக்காமல் பணம் வசூலித்ததாகப் புகார்

புதுச்சேரியில் நோயாளி இறந்ததை கூறாமல் பணம் வசூலித்ததாக தனியார் மருத்துவமனையைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தைச் சேர்ந்த ராமசாமி குடும்பத்தகராறு காரணமாக விஷம் அருந்தியுள்ளார். இதனையடுத்து வழுதாவூர் சாலையிலுள்ள ராணி மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்ட...

ஆள்மாறாட்டக் குழப்பத்தில் சரமாரியாக வெட்டப்பட்டவர் உயிரிழப்பு

சென்னையில் உறவினர் பெண்ணுடன் தவறான தொடர்பில் இருந்த நபரை கொலை செய்ய திட்டமிட்டு, ஆளை மாற்றி மற்றொரு இளைஞரை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை மாங்காடு அருகிலுள்ள கொளப்பாக்கத்தில் ஆள்மாறாட்டக் குழப்பத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட தினேஷ் இவர் தான். கார்...

பிரியதர்ஷினி பல் மருத்துவ கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம் - 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு

திருவள்ளூர் மாவட்டம் பாண்டூரில் உள்ள பிரியதர்ஷினி பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதலாவது சர்வதேச கருத்தரங்கில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்திரா கல்வி குழுமத்தின் ஒரு அங்கமான பிரியதர்ஷினி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில், பல் மருத்துவம் குறித்து...