​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னையில் 6 மாதங்களுக்கு பிறகு மழை... மக்கள் மகிழ்ச்சி..!

சுமார் 200 நாட்களுக்குப் பிறகு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  சென்னையில் கடந்த 6 மாதங்களாக மழை பெய்யாமல் இருந்ததால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் மக்கள் தவித்து வந்தனர். இதுமட்டும் அல்லாமல், நாளுக்கு...

தனியார் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

சென்னை பாரிமுனை அருகே தனியார் நிறுவன சேமிப்பு கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த மாநகராட்சி அதிகாரிகள், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். பாரிமுனை அருகே மண்ணடி பகுதியில் உமாசங்கர் என்பவருக்கு சொந்தமான, ஸ்ரீகிருஷ்ணா டிரான்ஸ்போர்ட்ஸ்...

குரூப் 1 தேர்வுகளை ரத்து கோரிய வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

டி.என்.பி.எஸ்.சி நடத்திய குரூப் -1 தேர்வை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. கேள்வி தாள் குளறுபடி, வெளிப்படைதன்மையின்மை உள்ளிட்ட காரணங்களை கூறி கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 1...

மெட்ரோ ரயில் நிறுவனத்தில், ரூ. 23 லட்சம் கையாடல் செய்த பெண் ஊழியர்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில், 23 லட்ச ரூபாயை கையாடல் செய்த பெண் ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிர்வாக அலுவலகத்தில் செம்மஞ்சேரியைச் சேர்ந்த பர்ஹத் பானு என்பவர் உதவி கணக்காளராக பணியாற்றி வந்துள்ளார். அவர் கடந்த...

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாக்யராஜ் அணியும் ஆளுநரை சந்திக்கிறது...

நடிகர் சங்க தேர்தலில், பாக்யராஜ் தலைமையில் போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணியினர் இன்று ஆளுநரை சந்திக்க உள்ளனர். நடிகர் சங்க தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டுமென ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து நடிகர் விஷால் நேற்று மனு அளித்தார். பிறகு செய்தியாளர்களை...

மிளகாய்ப்பொடி தூவி வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கும்பல்

சென்னை பூக்கடை பகுதியில் வழிப்போக்கர்கள் மீது மிளகாய்ப்பொடியைத் தூவி வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். பூக்கடை பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் மீது மிளகாய்ப்பொடியைத் தூவி, செல்போன், பணம், நகை...

ரவுடிகளுக்கு துப்பாக்கி வாங்கி கொடுத்தவனை போலீசார் தேடுகின்றனர்

சென்னை எண்ணூரில், துப்பாக்கியுடன் 2 ரவுடிகள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் சில ரவுடிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்த சையது என்பவனை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை எண்ணூரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர், அண்மையில் குண்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரிடம் போலீசார்...

ராஜராஜ சோழன் குறித்து சிலவற்றை மட்டுமே இயக்குனர் ரஞ்சித் பேசியுள்ளார் - அமைச்சர் பாண்டியராஜன்

ராஜராஜசோழன் குறித்து ஒருசில வரலாற்று அடிப்படையில் சில புள்ளிகளை மட்டுமே இணைத்து திரைப்பட இயக்குனர் ரஞ்சித் பேசியுள்ளார் என்று தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். சென்னையில், கல்வி சார்ந்த கருத்தரங்கில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரிவினையை தூண்டும்...

விஷால், தேர்தல் நடத்தும் அதிகாரி மீது ஐசரி கணேஷ் புகார்

நடிகர் சங்க தேர்தல் ரத்தாவதற்கு விஷால் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரி நீதிபதி பத்மநாபன் ஆகியோர் முறையாக செயல்படாதது தான் முக்கிய காரணம் என சுவாமி சங்கரதாஸ் அணியை சேர்ந்த ஐசரி கணேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைகழக அலுவலகத்தில்...

மக்களவையில் தமிழ் வாழ்க என முழங்கிய எம்.பி.க்களுக்கு பாராட்டு

தமிழக எம்.பி.க்கள் தமிழ் வாழ்க என்று மக்களவையில் முழக்கமிட்டதற்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோ மீது பதிவு செய்யப்பட்ட தேச துரோக வழக்கானது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில்...