​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஹாங்காங்கில் மீண்டும் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள்..!

ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்பட்டோரை சீனாவிற்கு கொண்டு சென்று விசாரிக்க வகை செய்யும், மசோதாவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில், வன்முறையில் ஈடுபட்ட காவலர்கள் மீது தனி விசாரணை நடத்த கோரி பல்லாயிரக் கணக்கானோர் பேரணி நடத்தினர். சீனா கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில், குற்றஞ்சாட்டப்படுபவர்களை சீனாவிற்கு...

உ.பி.யில் சட்டம் ஒழுங்கு சரியில்லை - மம்தா பானர்ஜி கண்டனம்

உத்தரப்பிரதேசத்தில் யோகி தலைமையிலான அரசு பதவியேற்றதில் இருந்து வன்முறைகள் அதிகரித்துள்ளதாக சாடியுள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இப்பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுவரை வன்முறை மற்றும் கும்பலாக தாக்கிய சம்பவங்களில் 1,100 பேர் உயிரிழந்துவிட்டதாக மம்தா பானர்ஜி...

இருட்டில் மெழுகுவர்த்திகளை ஏற்றி காங். தொண்டர்களுடன் பிரியங்கா தர்ணா

உத்தரப்பிரதேச மாநிலம் சோனபத்ரா செல்ல அனுமதி மறுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தமது கட்சியினருடன் விடுதியில் விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். விடுதிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்ட போதும் இருட்டில் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து காங்கிரஸ் கட்சியினர் தர்ணா...

போக்சோ வழக்குகள் அதிகரிப்பு

தமிழ்நாட்டில், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறையில் ஈடுபட்டு போக்சோ சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகள் 2017ஆம் ஆண்டைவிட, 2018ஆம் ஆண்டு 25 சதவீதம் அதிகரித்து இருப்பது, சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட்ட 2019-2020ஆம் ஆண்டுக்கான காவல்துறை கொள்கை விளக்க குறிப்பு மூலம் தெரியவந்துள்ளது. அதில், 2017ஆம்...

மலை கிராமத்தில் புகுந்து 2 பேரை படுகொலை செய்த மாவோயிஸ்ட்டுகள்

போலீசுக்கு உளவு சொன்னதாக மலைவாழ் மக்கள் இரண்டு பேரை தாக்கி படுகொலை செய்த மாவோயிஸ்ட்டுகளால் விசாகப்பட்டினம் அடுத்த மலைகிராமங்களில் பதற்றம் நிலவுகிறது. வீரவரம் என்ற கிராமத்தில் இரவு நேரத்தில் துப்பாக்கிகளுடன் ஊடுருவிய மாவோயிஸ்ட்டுகள் பாஸ்கர் ராவ், சிட்டி பாபு ஆகிய இருவரை வீட்டில்...

ரூட்டு தல மோதல்..! ரயிலில் தொடரும் மாணவர் அடாவடி..!

ரயில் பயணத்தின் மூலம் கல்லூரிக்கு சென்று கல்வியை கற்பதுடன், ஒருபடி மேலே போய் கற்ற கல்விக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், வன்முறையில் ஈடுபடும் கல்லூரி மாணவர்களை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி... கல்விக் கண் திறந்தவர் கர்மவீரர் காமராஜர் காலத்தில் இருந்து மாணவர்...

சீன வணிகர்களை நோக்கி நகர்ந்த ஹாங் காங் மக்கள் போராட்டம்

சீனாவுக்கு எதிராக ஹாங் காங்கில் வெடித்துள்ள மக்கள் போராட்டம், சீன வணிகர்கள் அதிகமுள்ள இடத்தை நோக்கி நகர்ந்தது. சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதிகளில் ஒன்றாக இருப்பது ஹாங் காங். அங்கு கைது செய்யப்படும் குற்றம் சாட்டப்பட்டோரை சீனாவுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கும் சட்டத்...

ரோஹிங்கியா மக்களுக்கு மியான்மரில் இந்தியா சார்பில் வீடுகள்

மியான்மரில் இருந்து இனப்படுகொலைக்கு தப்பி வெளியேறிய ரோஹிங்கியா மக்கள் தாய்நாடு திரும்பும் போது பயன்படுத்துவதற்காக அந்நாட்டில் இந்தியா 250 வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது.  கடந்த 2017ஆம் ஆண்டு மியான்மரில் இருந்து வெளியேறி சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா மக்கள் வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சம்...

வழக்கை விசாரிக்க சென்ற காவலரை தாக்கிய வன்முறை கும்பல்

ராஜஸ்தானில் வன்முறை கும்பலிடம் சிக்கிய போலீஸ்காரர் ஒருவர் இரும்புத் தடியாலும் கட்டைகளாலும் தாக்கப்பட்டதில் ரத்தம் சிந்தி பரிதாபகரமாக உயிரிழந்தார். பீம் நகரில் உள்ள காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த அப்துல் கனி என்ற காவலர் ஒரு வழக்கை விசாரிக்க பிரார் என்ற பகுதிக்கு சென்றார்....

எதிர்கால போர்கள் மிகுந்த வன்முறையை கொண்டதாக இருக்கும்

எதிர்காலத்தில் நிகழும் போர்கள் மிகவும் வன்முறையைக் கொண்டிருக்கும் என்றும் கற்பனையே செய்ய முடியாத நிலையில் இருக்கும் என்றும் ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் எந்த ஒரு தவறு செய்தாலும் உரிய முறையில் தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை...