​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு மிக கனமழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதோடு, தென்...

மழைநீரை சேமிக்கும் சரியான திட்டம் எதுவும் தமிழக அரசிடம் இல்லை - உயர்நீதிமன்றம்

மழை நீரை சேகரித்து வைக்க தமிழக அரசிடம் போதுமான திட்டங்கள் ஏதும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம்  கருத்து தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் உலக வங்கி நிதியுதவியுடன் 1,101 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டம் செயல்படுத்தப்படுகிறது....

சறுக்கி விழுந்து, எதிரில் வந்த லாரி மீது மோதி சின்னத்திரை உதவி இயக்குநர் பலி

சென்னை திருவல்லிக்கேணியில் முன்னால் சென்ற ஆட்டோவை இருச்சக்கர வாகனத்தில் முந்திச் சென்ற போது சறுக்கி விழுந்து, எதிரே வந்த லாரி மீது மோதி சின்னத்திரை உதவி இயக்குனர் பரிதாபமாக உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிஸ்வரன். இவரது நண்பர் பெருமாள்....

நிலத்தடி நீர் செறிவூட்டல் பணியை அமைச்சர் காமராஜ் துவக்கி வைத்தார்

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள தெப்பக்குளத்தில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நிலத்தடி நீர் செறிவூட்டல் பணியை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் துவக்கி வைத்தார். நிலத்தடி நீரை அதிகரிக்கவும், மழை நீரை சேகரிக்கவும், பாரம்பரிய நீர்நிலைகளை பாதுகாக்கவும் மத்திய அரசு நாடு...

இனி பெய்யும் ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிப்போம் என்று உறுதி மொழி எடுக்கவேண்டும் - எஸ்.பி.வேலுமணி

மழைநீரை சேமிக்கும் பணியில் மக்கள் ஈடுபடுமாறு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் பெய்த மழையில், எவ்வளவு விழுக்காடு நீரை சேமித்துள்ளோம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மழைநீர் சேகரிப்பை பொருத்தவரையில், அரசு தொடர்ந்து...

மழையையும் பொருட்படுத்தாமல் அத்திவரதர் தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்கள்

காஞ்சியில் 22ஆவது நாளாக அத்திவரதர் திருவிழா நடைபெற்று வருகிறது. மழையையும் பொருட்படுத்தாமல் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தகர்கள் அதிகாலை முதல் சாமி தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அத்திவரதர் திருவிழா கடந்த...

நீர்பிடிப்பு பகுதிகளில் மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!

பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரம், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர்...

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பரவலாக மழை...

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. ராயப்பேட்டை, மெரினா, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்துள்ளது. தாம்பரம், கீழ்க்கட்டளை, சேலையூர் ஆகிய இடங்களிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாகவும் பலத்த மழை பெய்தது. இதனிடையே, சென்னை...

குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றால அருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டியுள்ள இடங்களில் பெய்த மழையால், குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, மெயினருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்பொழுது குற்றாலத்தில் சீசன்...

திற்பரப்பு அருவியில், தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

குமரி மாவட்டம் திற்பரப்பு நீர் வீழ்ச்சியில், தண்ணீர் கொட்டுவதால் எராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். கடந்த இரண்டு நாட்களாக, தென்மேற்கு பருவமழை மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளதால், திற்பரப்பு நீர் வீழ்ச்சியில், நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று விடுமுறைதினம் என்பதால் தமிழகம் மற்றும் கேரளாவில்...