​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

யெல்லோ வெஸ்ட் போராட்டத்தில் போலீசாரின் வாகனங்கள் மீது தாக்குதல்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறும் யெல்லோ வெஸ்ட் போராட்டத்தில் போலீசாரின் வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து அங்கு கலவரம் வெடித்தது. எரிபொருள் மீதான வரிவிதிப்பை எதிர்த்து கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்ட யெல்லோ வெஸ்ட் போராட்டம் 18-வது கட்டமாக இன்றும்...

புவி வெப்பமாவதைத் தடுக்கக் கோரி உலகளவில் மாணவர் போராட்டம்

இளைய தலைமுறையை மாசற்ற சூழலில் வாழ விடுங்கள் என வலியுறுத்தி இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஏராளமான பள்ளி மாணவர்கள் நேற்று வகுப்புக்களைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். புவி வெப்ப மயமாதலை சுட்டிக்காட்டியும், இளைய தலைமுறையும், மூத்த தலைமுறையும் செய்யும் தவறுகளால் மாசுபடும்...

நாகையில் சாராய பாக்கெட்டுகளை சாலையில் போட்டு உடைத்த மக்கள்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே ரஸ்னான என்று கூறி விற்கப்படும் சாராய பாக்கெட்டுகளை சாலையில் போட்டு உடைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆக்கூர் மடப்புரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் ரஸ்னா என்ற பெயரில் பாக்கெட் போட்டு சாராயம் விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது. இதனை...

பள்ளிப்பாளையம் விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளனர். கூலி உயர்வு உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அவர்கள்,12ஆம் கட்டமாக விசைத்தறி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 10 சதவீத கூலி உயர்வு...

IPL டிக்கெட் வாங்க சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விடிய விடிய காத்திருந்த ரசிகர்கள்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். டிக்கெட்டுகளை வாங்க விடிய விடிய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.  2019ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் 23ஆம் தேதி தொடங்க உள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த முறை ஐபிஎல் தொடருக்கான அட்டவணை முதல் இரு வாரங்களுக்கு...

பொள்ளாச்சி வன்கொடுமை மனிதச் சங்கிலி போராட்டம்

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை மற்றும் பொள்ளாச்சியில் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். சென்னை திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் வாலாஜா சாலையில் பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், தன்னார்வலர்கள் என...

நெல்லை நாடாளுமன்ற தொகுதியை காங்கிரஸ்-க்கு ஒதுக்க கோரிக்கை தொண்டர்கள் போராட்டம்

நெல்லை நாடாளுமன்ற தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வலியுறுத்தி, நெல்லையில் உள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை நாடாளுமன்ற தொகுதி திமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த நெல்லை காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், மாவட்ட கட்சி அலுவலகம்...

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட கோரி ரயில் மறியல்

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கதேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தேவர் பக்த பேரவையினரை, போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை, மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வலியுறுத்தி, கடந்த...

சென்னையில் தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக மாணவ - மணவியரின் பெற்றோர் உள்ளிருப்புப் போராட்டம்

சென்னை பெரியமேட்டில் மகரிஷி வித்யா மந்திர் தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி மாணவ - மணவியரின் பெற்றோர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரிய மேட்டில் மகரிஷி வித்யா மந்திர் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு புதிய கட்டிடத்துக்கு...

சாலை விபத்தில் தந்தை-மகன் உயிரிழப்பு, ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சாலைமறியல்

ஈரோடு அருகே சாலை விபத்தில் தந்தை மற்றும் மகன் பலியானதை தொடர்ந்து உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  ஈரோடு அருகேயுள்ள மேட்டுபாளையம் கிராமத்தை சேர்ந்த தனபால் தனது 4 வயது மகன் சபரியுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். சித்தோடு...