​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காவல் நிலையம் முன் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞர்

மனைவி தன்னை தாக்கியதாக அளித்த புகாரை போலீசார் ஏற்காததால் சென்னை அசோக் நகர் காவல் நிலையத்தில் இளைஞர் பிளேடால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டார். சென்னை நெசப்பாக்கம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கார்த்திக். இவர் மீது அசோக்நகர் மற்றும் ராயலா நகர் காவல்...

நடிகர் சங்க தேர்தல் ரத்து

வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவிருந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை, மாவட்டப் பதிவாளர் நிறுத்தி வைத்துள்ளார்.  தென்னிந்திய நடிகர் சங்கத்தை அடுத்த 3 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தலை வரும் 23ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர்...

தொலைதூரக் கல்வியில் அரியர் வைத்துள்ளவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு

1980ஆம் ஆண்டு முதல் தொலைதூரக் கல்வியில் படித்து அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற இரண்டு சிறப்பு வாய்ப்புகளை வழங்க சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு அனுமதி வழங்கியுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வியில் 1980 முதல் 2018 வரை...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு முழு உடல் பரிசோதனை

தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலம் நடத்த இருந்த ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பொது உடல் பரிசோதனைக்காக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார்....

மருத்துவ பேராசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார்..! மொட்டை பெட்டிசன் என்கிறார் டீன்

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் எலும்பியல் துறை உதவி பேராசிரியர் ஒருவர் மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக எழுந்த புகார் குறித்து நடந்த விசாரணையின் போது, 126 மாணவிகளிடம் மிரட்டி கையெழுத்து பெறப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி...

மயில் சிலை திருட்டு வழக்கு -விசாரிக்காமல் வழக்குப்பதிவு செய்தது ஏன்?

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மயில் சிலை திருடப்பட்ட வழக்கில், முதற்கட்ட விசாரணை நடத்தாமல் முத்தையா ஸ்தபதியின் மீது வழக்கு பதிவு செய்தது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மயில் சிலை திருட்டு தொடர்பாக வழக்கு பதிவு...

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் அனல் காற்று வீசும்....

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 4 நாட்களுக்கு பின்னர் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வெப்பம் குறைய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு...

தண்ணீர் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் ஐ.டி நிறுவனங்கள்

சென்னையில், தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், வீட்டிலிருந்தே பணிகளை செய்யும்படி தமது ஊழியர்களை சில ஐடி நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. சென்னையில், கடந்த இரு மாதங்களாகவே தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துக் காணப்படுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதிய தண்ணீர் இல்லாததாலும், பருவமழை பொய்த்ததாலும்...

ஏற்றுமதி செய்யப்படும் மீன்களின் விலை சரிவு - மத்திய அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை

ஏற்றுமதி மீன்களுக்கான விலை குறைந்துள்ள நிலையில், இதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாகை மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் 14ம் தேதி முடிவடைந்ததையடுத்து,  கடலுக்கு சென்ற நாகை மீனவர்கள் அதிகாலை கரை திரும்பினர். இதனால்...

ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு

தமிழ்நாட்டில், சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட 14 மாநகராட்சிகள் உள்ளன. சென்னையை அடுத்த, திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட, ஆவடி நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்க கோரிக்கை எழுந்தது. சட்டப்பேரவையில் இதுகுறித்து வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதுகுறித்து பரிசீலித்த தமிழ்நாடு அரசு, ஆவடியை...