Polimer News
கல்வி சென்னை

வணிக நோக்குடன் பயன்படுத்தப்படும் பள்ளி வளாகம்- பள்ளி கல்வி துறை பதிலளிக்க உத்தரவு

பள்ளி வளாகத்தை வணிக நோக்குடன் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில்,பள்ளி கல்வி துறை இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வளர்மதி என்பவர் இதுகுறித்து மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கொருக்குப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின், ஒரு பகுதி கட்டிடம் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், நிறுவன பயன்பாட்டிற்காக பள்ளியின் பிரதான நுழைவு வாயில் 4 அடியாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினால் மாற்று சான்றிதழ் பெற்றுக் கொண்டு வேறு பள்ளிக்கு செல்லுமாறு கூறுவதாகவும், பள்ளியை மூட முயற்சிகள் நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி சத்திய நாராயணா, இதுகுறித்து பள்ளி கல்வி துறை இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.

Related posts

Polimer News