Polimer News
மாவட்டம் முக்கிய செய்தி

மண்ணில் புதைத்து வைத்திருந்த ரூ.75 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக மண்ணில் புதைத்து வைத்திருந்த 75 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருப்பூர் பகுதியில் உள்ள தோட்டத்தில், வாக்களர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலின்பேரில், தேர்தல் பறக்கும் படையினர் அங்கு அதிரடி சோதனை செய்தனர்.

அப்போது, சின்னராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில், 68 லட்சம் ரூபாய் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதேபோன்று, உருளைக்குடி அருகேயுள்ள ஒரு தோட்டத்தில் மண்ணில் புதைத்து வைத்திருந்த 7 லட்சம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 75 லட்சம் ரூபாய் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

Polimer News