Polimer News
அரசியல் முக்கிய செய்தி வீடியோ

வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர்

சேலம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

சேலம் பட்டைக்கோவில் தொடங்கி, கடைவீதி, சின்னக்கடை வீதி, முதல் அக்ரஹாரம் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்று அவர் வாக்கு சேகரித்தார். சிறு வியாபாரிகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்குச் சென்ற முதலமைச்சர், துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.

தேநீர் கடை ஒன்றுக்குச் சென்ற முதலமைச்சர் தேநீர் அருந்தியவாறே அங்கிருந்தவர்களிடம் வியாபாரம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்தவர்களிடமும் துண்டுப்பிரசுரங்களைக் கொடுத்து வாக்கு சேகரித்தார்.

Related posts

Polimer News