Polimer News
அரசியல்

ராகுல் காந்தி அமேதி மட்டுமின்றி வயநாடு தொகுதியிலும் போட்டி

உத்தரப்பிரதேசத்தின் அமேதி, கேரளாவின் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் ராகுல்காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்திருக்கிறது.

அமேதி தொகுதியில் இருந்து 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல், தென்மாநிலங்களில் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிடுவார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.ஆண்டனி டெல்லியில் நேற்று அறிவித்தார்.

இந்நிலையில், தோல்வி பயத்தால் ராகுல் காந்தி கேரளாவிற்கு தப்பியோடிவிட்டதாக, பா.ஜ.க தலைவர் அமித் ஷா விமர்சனம் செய்திருக்கிறார். உத்தரப் பிரதேசத்தில் பேசிய அவர், கடந்த ஐந்தாண்டுகளில் என்ன திட்டங்களை கொண்டு வந்தீர்கள் என அமேதி வாக்காளர்கள் கேட்பார்கள் என்பதால்தான் ராகுல் வயநாட்டில் போட்டியிடுவதாக அமித்ஷா குறிப்பிட்டார்.

Related posts

Polimer News