Polimer News
தமிழ்நாடு வீடியோ

குத்தகை முறையில் ரயில்களை இயக்க திட்டம்

சென்னையில், மின்சார ரயில்களை குத்தகை முறையில் இயக்கும் திட்டத்தை தெற்கு ரயில்வே முன்னெடுக்கவுள்ளது.

ஆந்திர மாநிலம் தடா அருகே ஸ்ரீசிட்டி என்ற இடத்தில் கிரியா பல்கலைக்கழகம் உள்ளது. இது விரைவில் செயல்பாட்டிற்கு வரவுள்ள நிலையில், சென்னையில் இருந்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை அழைத்துச் செல்வதற்காக மின்சார ரயிலை, அந்தப் பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுள்ளது.

இதற்கு ஒப்புதல் வழங்குவது பற்றி ரயில்வே நிர்வாகமும் ஆலோசித்து வருகிறது. 75 கிலோ மீட்டர் பயணத்திற்கு ஒரு நபருக்கு 65 ரூபாய் வீதம் பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளது.

ஏசி வசதி, பல்கலைக்கழக அறிவிப்புப் பலகை, விரும்பும் இடத்தில் நிறுத்தம், காபி மேக்கர் ஆகிய வசதிகளுடன் மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது.

கார் மற்றும் இதர போக்குவரத்து வசதிகளுக்கு பணம் அதிகம் செலவாகும் என்பதால் இந்த யோசனையை பல்கலைக்கழகம் முன் வைத்துள்ளது.

Related posts

Polimer News