Polimer News
அரசியல்

ஸ்டாலினை முதலமைச்சராக பார்க்க தமிழக மக்கள் விருப்பம் – சந்திரபாபு நாயுடு

தேர்தல் நடத்துவதில் தேர்தல் ஆணையம் முழுமையாக தோல்வியடைந்துள்ளதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் ஆண்டுகொண்டிருப்பது ஏடிஎம்கே அல்ல மோடிஎம்கே என்று விமர்சித்தார்.

வாக்குபதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யமுடியும் என்று கூறிய சந்திரபாபு, ஜெர்மனி , இத்தாலி , நெதர்லாந்து நாடுகளில் எல்லாம் வாக்குபதிவு இயந்திரம் பயண்படுத்துவதை நிறுத்திவிட்டதாக குறிப்பிட்டார்.

சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் விவிபேட் இயந்திரத்தில் ஒப்புகைச்சீட்டு, ஏழு நொடிகளுக்கு பதிலாக மூன்று நொடிகள் மட்டுமே தெரிந்துள்ளது என்றும், இதுகுறித்து தற்போது வரை தேர்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

ஜனநாயகத்தை காப்பாற்ற அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டியுள்ளது என்றும் சந்திரபாபு தெரிவித்தார்.

மத்தியில் ஆட்சியமைப்பதில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரதான பங்காற்ற போகிறார் என்றும் அவர் குறிப்பிட்டார். ஸ்டாலினை முதலமைச்சராக பார்க்க தமிழக மக்கள் விரும்புவதாகவும் சந்திரபாபு நாயுடு கூறினார்.

Related posts

Polimer News