Polimer News
அரசியல் வீடியோ

மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரசின் நிலைப்பாடு என்ன? ஓ.பி.எஸ் கேள்வி

மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரசின் நிலைப்பாடு என்ன? என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேனி மாவட்டம் பழனிச்செட்டிபட்டியில் உள்ள அதிமுக தேர்தல் அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், மேகதாதுவுக்கு மணல் கொண்டு செல்வதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறுவது வடிகட்டிய பொய் எனத் தெரிவித்தார்.

அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என பன்னீர்செல்வம் கூறினார். மேகதாதுவைக் கட்டுவோம் என கர்நாடகாவிலும், கட்ட விட மாட்டோம் என தமிழகத்திலும் காங்கிரஸ் பிரச்சாரம் செய்வதாக அவர் விமர்சித்தார்.

Related posts

Polimer News