Polimer News
Big Story அரசியல் வீடியோ

கடவுளை விமர்சித்ததால் ஓட்டு போடுவதில்லை..! சீமான் ஒப்புதல்

தான் 15 வருடங்களுக்கு முன்பு பெரியார் இயக்கத்தில் இருந்த போது சாதி, மதம், கடவுளை இழிவுபடுத்தி பேசியதை துண்டு, துண்டு காணொலிகளாக்கி தனக்கு ஓட்டுப்போடாமல் கதையை முடித்து விட்டதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வட சென்னையில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் ஆதங்கப்பட்டார்

வட சென்னை நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் காளியம்மாளை ஆதரித்து வாக்கு சேகரித்த சீமான் , தான் 15 வருடங்களுக்கு முன்பு பெரியார் இயக்கத்தில் இருந்த போது சாதி, மதம், கடவுளை இழிவுபடுத்தி பேசிய காணொலிகளை துண்டு, துண்டுகளாக பரப்பி தனக்கு ஓட்டுப்போடாமல் கதையை முடித்து விட்டதாக சிரித்து கொண்டே தெரிவித்தர்.

அதே நேரத்தில் தான் ஆட்சிக்கு வந்தால் ஆடு மாடு மேய்ப்பதை அரசு வேலையாக்குவேன் என்று கூறியதை, முகநூலில் கேலி செய்தவர்களை பொதுக்கூட்ட மேடை என்றும் பாராமல் சீமான் ஒருமையில் விமர்சித்தார்.

அதே நேரத்தில் தாங்கள் போட்டியிடும் 40 தொகுதியிலும் வெற்றி பெற்றால் தான் அல்லது மம்தா, அகிலேஷ் யாதவ், நடிகர்கள் பவன் கல்யான், பிரகாஷ்ராஜ் ஆகியவர்களில் யாராவது ஒருவர் பிரதமாராக இருப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தார் சீமான்..!

Related posts

Polimer News