Polimer News
இந்தியா வீடியோ

இருசக்கர வாகனத்தில் தீப்பிடித்து எரிவதைக் கவனிக்காமல் பயணம்

உத்தரப்பிரதேசத்தில் இருசக்கர வாகனத்தில் தீப்பிடித்ததை அறியாமல் பயணம் செய்தவர்களை, போலீசார் தங்கள் வாகனத்தில் துரத்திச் சென்று எச்சரித்து காப்பாற்றினர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் இட்டாவாவில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் பக்கவாட்டில் தொங்க விடப்பட்டிருந்த பைகளில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

image

வாகன ஓட்டியும், பின்னால் அமர்ந்திருந்த பெண்ணும் இதை கவனிக்காத நிலையில், நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்தனர்.

உடனடியாக காரில் விரட்டிச் சென்ற அவர்கள் இருசக்கர வாகன ஓட்டியை எச்சரித்தனர். இதை அடுத்து இருசக்கர வாகனத்தில் இருந்த பெண் தனது குழந்தையுடன் கீழே இறங்கி விட தீ அணைக்கப்பட்டது.

Related posts

Polimer News