Polimer News
கல்வி

மத்திய கல்வி நிறுவனங்களில் கூடுதலாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள்

நாடு முழுவதும் உள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் கூடுதலாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீட்டை சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்தது. இந்நிலையில், 158 மத்திய கல்வி நிறுவனங்களில் கூடுதலாக 2 லட்சத்து 14 ஆயிரத்து 766 இடங்களை உருவாக்க மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, 2019-20 ஆம் கல்வியாண்டில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 983 இடங்களும், 2020-21ஆம் கல்வியாண்டில் 95 ஆயிரத்து 783 இடங்களும் உருவாக்கப்பட உள்ளன. 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய கல்வி நிறுவனங்களுக்கு 4 ஆயிரத்து 315 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Related posts

Polimer News