Polimer News
தமிழ்நாடு

காவல் வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்படவில்லை – அசுதோஷ் சுக்லா

காவல் வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்படவில்லை என தமிழக தேர்தல் பிரிவு காவல்துறை தலைவர் அசுதோஷ் சுக்லா தெரிவித்துள்ளார்.

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், தமிழக தேர்தல் பிரிவு காவல்துறை தலைவர் அசுதோஷ் சுக்லா தலைமையில் 8 மாவட்ட காவல் துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்கு மையங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்பதால் வாக்காளர்கள் அச்சமின்றி ஜனநாயக கடைமை ஆற்ற வரவேண்டும் என தெரிவித்தார்.

கேரளா, ஆந்திரா கர்நாடகா போன்ற எல்லைப்பகுதிகளில் ஏற்கனவே போதுமான படைகள் பாதுகாப்பில் ஈடுபட்டிருப்பதால் பிரச்சனைகள் எழ வாய்ப்பில்லை என கூறிய அவர், வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு, சிசிடிவி கண்காணிப்பு ஆகியவற்றுடன் ஒரு டி.எஸ்.பி தலைமையில் தொடர் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். 

Related posts

Polimer News