Polimer News
அரசியல்

அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாருக்கு வருமான வரித்துறை சம்மன்

சென்னையில் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி அறையில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் விசாரணைக்கு ஆஜராக வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விடுதியறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வருமான வரித்துறையினர், தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

பணம் பதுக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனையை மேற்கொண்டதாக கூறியுள்ள அதிகாரிகள், நேரில் சென்ற போது சில காலி பைகளில் சந்தேகத்திற்கிடமான துண்டு சீட்டுகள் மட்டுமே கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட துண்டு சீட்டுகள் பணம் விநியோகம் தொடர்பானவையா என விசாரிக்க அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Related posts

Polimer News