Polimer News
இந்தியா

மெட்ரோ ரயிலில் விபரீதம்

டெல்லியில், புடவையின் முந்தானை மெட்ரோ ரயிலின் தானியங்கி கதவில் சிக்கிக்கொண்டதால் பெண் ஒருவர் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டார்.

நொய்டா எலக்ட்ரானிக் சிட்டியிலிருந்து துவாரகா நோக்கி சென்ற மெட்ரோ ரயிலில், கீதா என்ற பெண் தனது மகளுடன் பயணித்தார்.

மோதி நகர் ரயில் நிலையத்தில் அவர்கள் இறங்கியபோது, கீதாவின்  புடவை முந்தானை தானியங்கி கதவில் சிக்கிக்கொண்டது.

இதனை சுதாரிப்பதற்குள் ரயில் அங்கிருந்து புறப்படவே, கீதா கீழே விழுந்து சிறிது தூரம் பிளாட்பாரத்தில் இழுத்து செல்லப்பட்டார்.

ரயில் பயணி ஒருவர் அவசர ஒலியை அழுத்தியதை தொடர்ந்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. தலையில் பலத்த காயமடைந்தவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Related posts

Polimer News