Polimer News
அரசியல்

மன்சூர் அலிகானுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

திண்டுக்கல் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மன்சூர் அலிகானை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நடிகர் மன்சூர் அலிகான் தனது வேட்புமனுவில், முகவரி, சொத்து விவரங்கள் மற்றும் தன் மீதான வழக்குகள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளதால், அவரை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை மதுரவாயலைச் சேர்ந்த பாரி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தால் மட்டுமே சம்பந்தப்பட்டவரை தகுதி நீக்கம் செய்ய முடியும் என தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related posts

Polimer News