Polimer News
தமிழ்நாடு

நிர்மலாதேவி வரும் திங்கட்கிழமை ஆஜராக மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் நிர்மலாதேவியிடம் சில விளக்கங்களைப் பெற  நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி தொடர்பான வழக்கு, விசாரணைக்காக பட்டியலிடப்படவில்லை.

இந்நிலையில்,  நிர்மலாதேவி தொடர்பான வழக்கை விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில்  இன்று முறையிட்டார்.

அதனையடுத்து,  நிர்மலாதேவியிடம் ஏற்கனவே  விசாரித்த நிலையில் மேலும் சில  சந்தேகங்களை தெளிவுபடுத்த வேண்டும் எனவும், அதற்காக நிர்மலாதேவி வரும் திங்கட்கிழமை நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும்,  தொடர்ந்து அன்றைய தினமே வழக்கை விசாரணைக்காக பட்டியலிடவும் உத்தரவிட்டனர்.

Related posts

Polimer News