Polimer News
உலகம்

ஈக்வேடார் தூதரகத்தை வேவு பார்க்க பயன்படுத்திய அசாஞ்சே

தங்கள் நாட்டு தூதரகத்தை ஜூலியன் அசாஞ்சே வேவு பார்ப்பதற்காக பயன்படுத்திக் கொண்டதாக ஈக்வேடார் அதிபர் லெனின் மொரெனோ தெரிவித்துள்ளார்.

7 ஆண்டுகளாக லண்டனில் உள்ள ஈக்வேடார் தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கடந்த வாரம் லண்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அசாஞ்சேவின் கைது குறித்து ஈக்வேடார் அதிபர் லெனின் மோரெனோ பேசிய போது, அவர் தூதரகத்தை வேவு பார்க்கும் மையமாக பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

தங்கள் நாட்டு தூதரகத்தில் இருந்து மற்ற நாடுகளை வேவு பார்ப்பதை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய மோரெனோ, இது தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும் சர்வதேச சட்டத்தின் படி அசாஞ்சேவை வெளியே அனுப்பியதாகவும் தெரிவித்தார்.

Related posts

Polimer News