Polimer News
அரசியல் விளையாட்டு வீடியோ

பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த ஜடேஜா

தனது தந்தையும், சகோதரியும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தாலும் தனது ஆதரவு பாஜகவுக்கு தான் என கிரிக்கெட் வீரர் ஜடேஜா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா கடந்த மாதம் பாஜகவில் இணைந்தார்.

இதனையடுத்து ஜடேஜாவின் தந்தை அனிருத்சின் மற்றும் சகோதரி நைனாபா கடந்த ஏப்ரல் 13ம் தேதி காங்கிரசில் சேர்ந்தனர்.

இந்நிலையில் ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில், தான் பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக கூறி பிரதமர் மோடியை டேக் செய்துள்ளார்.

Related posts

Polimer News