Polimer News
சற்றுமுன் தமிழ்நாடு முக்கிய செய்தி வீடியோ

நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்தீஷ் மாரடைப்பால் மரணம்

நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்தீஷ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46.

இலங்கையின் கண்டி நகரில் 1973 ஆம் பிறந்தவர் ஜே.கே.ரித்தீஷ். 1976 ஆம் ஆண்டு அவரது குடும்பம் ராமேஸ்வரத்திற்கு குடிபெயர்ந்தது. 2007 ஆம் ஆண்டு கானல் நீர் என்ற படத்தில் அறிமுகமான ரித்தீஷ், நாயகன், பெண் சிங்கம், எல்கேஜி ஆகிய திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.

2009 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு ரித்தீஷ் வெற்றி பெற்றார். பின்னர் 2014 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். தற்போது ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பல்வேறு இடங்களில் ரித்தீஷ் பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள அவரது வீட்டில் இருந்த போது நேற்று இரவு ரித்தீஷ்க்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி ரித்தீஷ் உயிரிழந்தார்.

அவரது உடல் அஞ்சலி செலுத்துவதற்காக வீட்டிற்கு எடுத்துவரப்படுகிறது. ரித்தீஷின் திடீர் மரணத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ள அவரது ஆதரவாளர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்த திரண்டுள்ளனர்.

Related posts

Polimer News