Polimer News
இந்தியா

சிறுநீரகத்தை விற்க அனுமதி கோரிய சுயேட்சை வேட்பாளர்

தேர்தல் செலவீனங்களுக்காக சிறுநீரகத்தை விற்க அனுமதி வழங்க வேண்டுமென, தேர்தல் ஆணையத்துக்கு மத்திய பிரதேசம் பாலகாட் தொகுதி சுயேட்சை வேட்பாளர் கடிதம் எழுதியுள்ளார்.

மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும், அதிகபட்சமாக 75 லட்சம் ரூபாய் மட்டுமே செலவிட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்தநிலையில், தேர்தலுக்கு செலவிட தன்னிடம் போதிய நிதியில்லை என தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ள பாலகாட் தொகுதி சுயேட்சை வேட்பாளர் கிஷோர் சம்ரிதி((Kishore Samrite)), தேர்தல் செலவீனங்களை எதிர்கொள்ள ஆணையம் 75 லட்சம் ரூபாயை வழங்க வேண்டும் அல்லது தனது சிறுநீரகத்தில் ஒன்றை விற்க அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

Polimer News