Polimer News
விளையாட்டு

பிசிசிஐயின் முடிவு குறித்து ரசிகர்களிடம் கருத்துக்கேட்டிருக்கும் ஐசிசி

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் அம்பத்தி ராயுடு சேர்க்கப்படாதது குறித்து ரசிகர்களிடம் ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்கேட்டுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை நேற்று பிசிசிஐ அறிவித்தது. இந்த அணியில் அம்பத்தி ராயுடு இடம்பெற வாய்ப்பிருப்பதாக கிரிக்கெட் ஆலோசகர்கள் தெரிவித்து வந்த நிலையில் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை.

இந்நிலையில் பிசிசிஐயின் இந்த முடிவு சரிதானா? என ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் கருத்துக் கேட்டுள்ளது. மேலும் அந்த பதிவில் அதிக பேட்டிங் சராசரி வைத்திருக்கும் இந்திய பேட்ஸ்மேன்கள் வரிசையில் கோலி, தோனி, ரோகித் ஷர்மாவுக்கு பிறகு அம்பத்தி ராயுடு தான் இருக்கிறார் என்பதையும் ஐசிசி குறிப்பிட்டுள்ளது.

Related posts

Polimer News