Polimer News
தமிழ்நாடு முக்கிய செய்தி

ரூ. 1,58,900 லட்சம் பணம் பறிமுதல் – துண்டுப் பிரசுரங்களும் பறிமுதல்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்துகொண்டிருந்த ஒருவரை மடக்கிய தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள், அவரிடம் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

நிம்மியம்பட்டு ராணிப்பேட்டை பகுதியில் சம்பத் என்பவர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்துகொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

உடனடியாக தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள், அவரை கையும் களவுமாக மடக்கி ஒரு லட்சத்து 58 ஆயிரத்து தொள்ளாயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் சம்பத்திடம் இருந்து அரசியல் கட்சி ஒன்றின் விளம்பரம் பொறித்த துண்டுப் பிரசுங்களையும் பறிமுதல் செய்தனர்.

கைப்பற்றப்பட்ட பணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதேபோல மரிமாணிக்கம் பகுதியில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டிருந்த கோபி மற்றும் மேகநாதன் ஆகியோரை தனித்தனியே மடக்கிய தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள், அவர்களிடம் இருந்து 38 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் அரசியல் கட்சி பெண் நிர்வாகி

தேனி மாவட்டம் போடி அருகே அரசியல் கட்சி ஒன்றைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலசொக்கநாதபுரம் பகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்காளர் பெயர் பட்டியலைப் பார்த்து அந்தப் பெண் நிர்வாகி பணம் கொடுப்பது போன்று அதில் பதிவாகியுள்ளது.

Related posts

Polimer News