Polimer News
இந்தியா

பாதுகாப்புப்படையினர்-தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே, கடுமையான துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது.

காஷ்மீர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள மிதுரா என்ற இடத்தில், மூன்று தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உடனடியாக அந்த இடத்தை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தபோது, தீவிரவாதிகள், துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.

பாதுகாப்புப்படையினரும், துப்பாக்கியால் சுட்டு பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக, மிதுரா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், இணைய சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

Related posts

Polimer News