Polimer News
சென்னை

வீட்டிலேயே கஞ்சா பதுக்கி வைத்திருந்த காவலர்

சென்னையில் வீட்டிலேயே கஞ்சா பதுக்கி வைத்திருந்த காவல் உதவி ஆய்வாளரை, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு சென்னை கோட்டை காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சுந்தர வடிவேலுவின், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரையும் கைது செய்தனர்.

இதையடுத்து ஜாமீனில் வெளியே வந்த அவர், காவல் கட்டுப்பாட்டு அறையில் பணியமர்த்தப்பட்டார். இருப்பினும் கஞ்சா பறிமுதல் வழக்கில் அவர்மீது துறை ரீதியிலான விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த விசாரணை முடிவுற்ற நிலையில், சுந்தரவடிவேலுவை பணிநீக்கம் செய்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சுந்தரவடிவேலு கடந்த ஆண்டு, மீண்டும் சிறப்பு உதவி ஆய்வாளராக நியமிக்கப்பட்டு மெரீனா காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Polimer News