Polimer News
சென்னை

தேர்தல் பறக்கும் படையினரைக் கண்காணிக்க ஜி.பி.ஆர்.எஸ்

தேர்தல் பறக்கும் படைகளை ஜி.பி.ஆர்.எஸ். மூலம் கண்காணிக்க தலைமைச் செயலகத்தில் கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டுள்ளது.

சி விஜில் செயலி மற்றும் தொலைப்பேசி வாயிலாக பெறப்படும் புகார்கள் மீதான நடவடிக்கையின் போது தேர்தல் பறக்கும் படையின் நகர்வுகளை கண்காணிப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜி.பி.ஆர்.எஸ்., மூலம் கண்காணிப்பதற்காக தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் கட்டுப்பட்டறை அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வாக்குப்பதிவு மையங்களை வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்க மற்றொரு கட்டுப்பாட்டு அறையும் தலைமை செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளை இதன் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.,

தேர்தல் தினத்தன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு கண்காணிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Polimer News