காஷ்மீரில் இந்த வாரயிறுதியில் 20 வெளிநாட்டு தூதர்கள் வருவர் என தகவல்
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 20 நாடுகளின் தூதர்கள் இந்த வார இறுதியில் ஜம்மு காஷ்மீரில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆக்ஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அது இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. அதை தொடர்ந்து எழுந்த அரசியல் விமர்சனங்களின் பின்னணியில் கடந்த மாதம் 9 ஆம் தேதி 15 வெளிநாட்டு தூதர்கள் ஸ்ரீநகரில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து ராணுவத்தினர், அரசியல்வாதிகள் மற்றும் உள்ளூர் தலைவர்களை சந்தித்து நிலைமையை ஆராய்ந்தனர்.
அந்த குழுவில் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் பெரிய அளவில் இடம் பெறவில்லை என்ற விமர்சனம் எழுந்த நிலையில் இரண்டாவது கட்டமாக ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட சிறிய பெரிய நாடுகளின் தூதர்கள் பார்வையிட இருக்கின்றனர்.
மத்திய அரசின் நடவடிக்கைக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரில், இயல்பு நிலையை கொண்டுவர எடுக்கப்பட்ட முயற்சிகளை, வெளிநாடுகளுக்கு எடுத்துக் காட்டுவதே இந்த பயணத்தின் நோக்கம்.
Comments