இதுவரை இந்தியாவில் 1.97 லட்சம் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை
கொரானா வைரஸ் தாக்குதலுக்குப் பிறகு நாட்டில் உள்ள 21 சர்வதேச விமான நிலையங்களில் ஒரு லட்சத்து 97 ஆயிரம் பயணிகளுக்கு நோய் தொற்று சோதனை நடத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களவையில் விளக்கம் அளித்த அவர், சந்தேகம் ஏற்பட்ட ஆயிரத்து 500 பேருடைய ரத்தத்தை ஆய்வு செய்ததில், கேரளாவில் உள்ள 3 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறினார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிநபர் பாதுகாப்பை உறுதி செய்யும் கருவிகள், என்95 முககவசங்கள் போன்றவற்றின் ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இவை போதிய அளவிற்கு மத்திய, மாநில அரசுகளின் இருப்பில் உள்ளதாகவும் கூறினார்.
சீனா சென்று வந்த அனைவரையும் கண்காணிக்கும் பணிகள் நாடு முழுதும் முடுக்கி விடப்பட்டுள்ளதாக கூறிய அவர், ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின் கீழ் 9 ஆயிரத்து 452 பேர் மத்திய அரசின் கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
Comments